கெப்டவ்ன்: நீர்சறுக்கு (சேர்ஃபிங்) விளையாட்டு போட்டி ஒன்றின் போது வீரர் ஒருவரை சுறா மீன் தாக்கியது. ஆனால், அவர் தனது நீர் சறுக்கு பலகையின் உதவியுடன் அதன் தாக்குதலில் இருந்து தப்பி கரைக்கு வந்துவிட்டார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மிக் ஃபன்னிங் என்னும் அந்த வீரர் தென்னாப்பிரிக்காவின் ஜெஃபிரி குடாவில் நடந்த சர்வதேச போட்டியில் கலந்துகொண்ட போதே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், போட்டி ரத்துச் செய்யப்பட்டுவிட்டது.
Leave a comment