மட்டக்களப்பு: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் எம்.ரி.உவைஸ் தலைiயிலான 11வது இலக்க சுயேற்சைக்குழு ஐக்கிய தேசியக் கட்சியிக்கு ஆதரவளிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சுயேற்சைக்குழுவின் தலைமை வேட்பாளர் எம்.ரி.உவைஸ் (20.7.2015)தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அதன் தலைமை வேட்பாளர் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு தமது சுயேற்சைக்குழு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் உவைஸ் மேலும் கூறினார்.
இது தொடர்பாக எம்.எஸ்.எஸ். அமீர் அலிக்கும் மேற்படி சுயேற்சைக்குழுவின் தலைமை வேட்பாளர் உவைஸ் மற்றும் அவரது குழுவின் அங்கத்தவர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று (19.7.2015) காத்தான்குடியில் நடைபெற்றது.
இதன் போது எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் 11வது இலக்க சுயேற்சைக்குழு ஐக்கிய தேசியக் கட்சியின்சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அதன் தலைமை வேட்பாளர் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு தமது சுயேற்சைக்குழு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் மாவட்டத்தின் அபிவிருத்தி சமூக ஒற்றுமை இவற்றை கருத்திற் கொண்டு தாம் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் சுயேற்சைக்குழுவின் தலைமை வேட்பாளர் உவைஸ் குறிப்பிட்டார்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட மீனவர் கடற்றொழில்; சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் எஸ்.விவேகானந்தராசாவும் தனது ஆதரவை இத் தேர்தில் அமீர் அலிக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்து அமீர் அலியுடன் இணைந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமீர்அலியின் கடந்தகால செயற்திட்டங்கள் பாராட்டத்தக்கது மற்றும் அவரின் எதிர் காலத்தில் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ள அபிருத்தி வேலைத்திட்டங்களும் வரவேற்கத்தக்கது. அதனால் அவரை ஆதரிக்க முடிவு செய்தேன்.
நானும் அமீர் அலியை ஆதரிப்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்களின் ஆதரவையும் அமீர் அலிக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என இதன் போது மட்டக்களப்பு மாவட்ட மீனவர் கடற்றொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் எஸ்.விவேகானந்தராசா குறிப்பிட்டார்.
இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அதன் தலைமை வேட்பாளர் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஏ.எம்.றூபி மற்றும் அமீர் அலியின் இணைப்பாளர் எம்.மாஹீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Published by


Leave a comment