Category: Your Kattankudy
-
தேசியப் பட்டியல் விவகாரம்; ரிஷாட் பதியுதீனின் கட்சிக்குள் முரண்பாடுகள்
கொழும்பு: இலங்கை நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தேசிய பட்டியல்க்கு முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் அக்கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. கட்சியின் தலைவருக்கு எதிராக செயலாளர் போர்க்கொடி தூக்கியுள்ளார். கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் கட்சியின் கூட்டுப் பொறுப்புகளிலிருந்து விலகி தன்னிச்சையாக இந்த நியமனத்தில் முடிவு எடுத்துள்ளதாக பொதுச் செயலாளரான வை. எல். எஸ். ஹமீட் குற்றம் சாட்டுகின்றார்.
-
எல்லை மீறப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களின் வெற்றி ஊர்வலம்: உலமாக்களும், பொதுமக்களும் கவலை!
விசேட நிருபர் (இண்டாம் இணைப்பு) காத்தான்குடி: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, பலத்த போராட்டத்தின் பின்னர் இன்று பிற்பகல் தேசியப் பட்டியல் ரீதியாக பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டதையடுத்து, சற்றுமுன்னர் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் ஊர்வலமொன்று இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி ஆராவரம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தேசிய தலைவரின் தாராள தன்மையும் தூரநோக்கும்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் வாக்கு வங்கிகளை இழந்து இருந்த எமது கட்சி தற்போது ஒரு இஸ்திர தன்மை அடைந்து இருக்கும் வேலையில் எமது தலைவரின் தூர நோக்காக காணப்படும் செயல்களில் ஒன்றாக காத்தான்குடி / கல்குடாவுக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வழங்குவதற்கான தாராளத்தன்மை, இதன் அடிப்படையில் தலைவர் ஒரு சிறந்த முடிவு எடுப்பார்.
-
எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கின்ற சமூக அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவை கோருகிறார் ஷிப்லி பாறூக்
எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள சமூக அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவை வழங்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐமசுமு தேசிய பட்டியல்: மக்கள் நிராகரித்த 7 பேரில் ஹிஸ்புல்லாஹ்வும் தெரிவு
கொழும்பு: நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்ற 12 தேசிய பட்டியல் ஆசனங்களுக்குரிய நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
“கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடரும்” – ஹிஸ்புல்லா
எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடரும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிததுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் 19.08.2015 திகதியிட்டு அவர் வெளியிட்டுள்ள பிசுரமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
-
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கருஜெயசூரிய
கொழும்பு: புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
-
தேர்தலுக்கு பின்னரான மட்டக்களப்பின் உணர்வலைகள்
முஹம்மத் றிபாஸ் மட்டக்களப்பு: பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடத்து முடிந்துள்ளது, சிறுபான்மை மக்கள் ஆசுவாசப் பட்டுக்கொள்ளக் கூடியவாறு தேர்தல் பெறுபேறுகள் அமைந்துள்ளன. பல தசாப்த அரசியல் தலைமைகளை தோற்கடித்து பல புதிய முகங்களை பாராளுமன்றத்திற்கு மக்கள் தெரிவு செய்துள்ளனர். இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் வாக்களர்களின் வாக்குகள் எதிர்பார்த்த அளவிற்கு அளிக்கப் படாமையினால் தமிழ் தரப்பு இம்முறையும் மூன்று பிரதிநிதிகளையே பெற்றுக் கொண்டது.
-
“லால் காந்தவின் இராஜிநாமாவுக்கு உள்ளக முரண்பாடு காரணமல்ல”
எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலுக்கும் அக் கட்சியின் லால் காந்த மேல் மாகாண சபையிலிருந்து இராஜிநாமா செய்ததற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் அதனை தவறாக அறிக்கையிட வேண்டாமெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற 6 பேர் தேசியப் பட்டியலில் இடம்
எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற 6 பேர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லவுள்ளதாகத் தெரியவருகிறது. எஸ்.பீ.திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, பியசேன கமகே, லக்ஷ்மன் யாபா அபேவர்தன, விஜித விஜயமுனி சொய்சா, நந்தமித்ர ஏக்கநாக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நிமிப்பதற்கு பெருமளவில் வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஜனாதிபதித் தேர்தலுக்கு பஸ் பெற்றுக்கொண்டமை தொடர்பில் மஹிந்தவுக்கு எதிராக வழக்கு
எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலின்போது அரசியல் வேலைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகைளைப் பெற்றுக்கொண்டமைக்காக செலுத்தப்பட வேண்டிய 14 கோடி ரூபாய்களைக் கோரி இலங்கை போக்குவரத்து சபை ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ஏழு பேருக்கு எதிராக கொழும்பு வணிக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.