“லால் காந்தவின் இராஜிநாமாவுக்கு உள்ளக முரண்பாடு காரணமல்ல”

  • எம்.ஐ.அப்துல் நஸார்

lal kanthaகொழும்பு: மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலுக்கும் அக் கட்சியின் லால் காந்த மேல் மாகாண சபையிலிருந்து இராஜிநாமா செய்ததற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் அதனை தவறாக அறிக்கையிட வேண்டாமெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழுநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு மாகாண சபை உறுப்பினர் பதவி இடைஞ்சலாக இருப்பதால் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்து லால் காந்த அவர்கள் ஆகஸ்ட் 10ஆம் திகதியே தனது இராஜிநாமா கடிதத்தை கையளித்துவிட்டிருந்ததாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கே.ரி.லால் காந்த 2015 பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54 ஆயிரத்து 466 விருப்பு வாக்குகளைப் பெற்று கட்சியில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Published by

Leave a comment