“கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடரும்” – ஹிஸ்புல்லா

  • எம்.ஐ. அப்துல் நஸார்

hizbullahகாத்தான்குடி: கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடரும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிததுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் 19.08.2015 திகதியிட்டு அவர் வெளியிட்டுள்ள பிசுரமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பிரசுரத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, நடந்து முடிந்த 15ஆவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் சார்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 32,232 வாக்குகளைப் பெற்றுள்ளது. இருந்தாலும் எம் சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை நாம் இழந்துள்ளோம்.

நாம் தேர்தல் காலத்தில் கூறியது போலவே எமதூரைச் சேர்ந்த ஒரு குழுவினரால் எமது ஊரின் பிரதிநிதித்துவம் மிகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. என்பதை பொதுமக்களாகிய உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

hizbullah

இத் தேர்தலில் எமது வெற்றிக்காக பாடுபட்ட ஆதரவாளர்கள், வாக்களித்த பொதுமக்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எம் சமூகத்திற்கும், எம் மாவட்டத்திற்கும் பொது மக்காளாகிய உங்களின் ஒத்துழைப்போடு என்னால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment