-
எம்.ஐ.அப்துல் நஸார்
கொழும்பு: வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற 6 பேர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லவுள்ளதாகத் தெரியவருகிறது. எஸ்.பீ.திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, பியசேன கமகே, லக்ஷ்மன் யாபா அபேவர்தன, விஜித விஜயமுனி சொய்சா, நந்தமித்ர ஏக்கநாக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நிமிப்பதற்கு பெருமளவில் வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அனைவரும் கடந்த 17ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்களாவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் இவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிக்கப்பட வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
மேலும் ஆறு பேரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
தேர்தலில் தோல்வியுற்றவர்களை தேசியப்பட்டியல் மூலம் நியமிப்பது சட்டபூர்வமானதே என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment