Category: Your Kattankudy
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நிறைவு!
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நேற்று இரவுடன் நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதற்காக தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து தரப்பினரும் பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
-
பழங்கால பல்மைரா நகரின் காப்பாளர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை
டமஸ்கஸ்: சிரியாவில் உள்ள பழங்கால நகரமான பல்மைராவின் காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அகழ்வாராய்ச்சியாளரான காலீத் அல் – அசாதை இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்பினர் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர். ஐநாவின் கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ இந்தக் கொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஆ.இ.ம.கா வின் எழுச்சியும் தேசிய தலைவர் மீள் பிரகடனமும்
ஏ.எச்.எம்.பூமுதீன் கொழும்பு: பொதுத் தேர்தல் முடிவு ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு எழுச்சியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன் ரிசாத் பதியுதீனை நாட்டின் தேசியத் தலைவராகவும் இந்த முடிவு மீளவும் பிரகடனப் படுத்தியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 07 மாவட்டங்களில் களமிறங்கியிருந்தது. வன்னி, புத்தளம் ,அநுராதபுரம், குருநாகல் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஐதேகவின் யானைச் சின்னத்திலும் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் சொந்தச் சின்னமான மயிலிலும் போட்டியிட்டது.
-
வெற்றிலைச்சின்னத்தில் தெரிவான ஒரே ஒரு முஸ்லிம் பிரதிநிதி
கொழும்பு: நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடுபூராகவும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களுள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
-
தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக குமார் சங்கக்கார ஜனாதிபதியினால் நியமிப்பு
தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கையளித்து வைக்கும் நிகழ்வினை படத்தில் காணலாம்.
-
‘நான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பேன்’: மகிந்த ராஜபக்ஷ
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் அரசியலில் நீடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சவால்களுக்கு மத்தியில் தான் பெற்ற வாக்கு முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டிற்காக தான் ஆற்றிய சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
“நல்லாட்சியின் திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆணையை வழங்கிய அனைவருக்கும் நன்றி”: முஜிபுர் ரஹ்மான்
கொழும்பு: நல்லாட்சியின் திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆணையை வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள முஜிபுர் ரஹ்மான், இந்த பயணத்தில் இன, மத, கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
-
வரலாறு காணாத விருப்பு வாக்கு சாதனை படைத்தார் ரணில்
கொழும்பு: இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை படைத்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 5,00,566 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
பிரதேச வாதம், ஊர்வாதம், ஊருக்கு எம்.பி என்ற வாதங்களையெல்லாம் தாண்டி வாக்களித்த மக்களின் உணர்வை மெச்சுகின்றேன் – நன்றி நவிலலில் ஹரீஸ்
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: கட்சியின் இருப்பையும், மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாப்பதற்கு ஒன்றுதிரண்டு வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களின் சமூக உணர்வை மெச்சுகின்றேன் என நடைபெற்ற முடிந்த பொதுத்தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
-
ஜனாதிபதியின் அதிரடிகள் : கட்சிகளின் செயலாளர்களின் நீக்கம், இரு தரப்பினரும் நீதிமன்றம் செல்வார்களா..?
எம். இனாமுல்லாஹ் கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேமா ஜயந்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அனுரா பிரியதர்சன ஆகிய இருவரையும் அந்தப் பதவிகளில் இருந்து மைத்ரி நீக்கி விட்டு இரண்டு புதியவர்களை நியமித்தமை தொடர்பான சட்ட சிக்கல்கள்.
-
“எனது பிரதமர் கனவு பலிக்கவில்லை”: மஹிந்த
கொழும்பு: 15 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. இந்தத் தேர்தலில் ஐ. ம. சு. மு அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. பிரதமராக வருவது என்ற என்னுடைய கனவு இல்லாமற் போயுள்ளது.
-
“வெற்றி, தோல்வி வேறுபாடுகளை மறந்து தாய்நாட்டை கட்டியெழுப்புவோம்”
கொழும்பு: “வெற்றிபெற்றோர் தோல்வியுற்றோர் என வேறு பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தாயின் மக்களாக இணைந்து செயற்பட்டு நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நவீன யுகத்தின் சவால்களை எதிர்கொண்டு நம் தாய்நாட்டை உலகளவில் உயர்த்த ஏகமனதாய் நின்று தோள் கொடுப்போம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.