எல்லை மீறப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களின் வெற்றி ஊர்வலம்: உலமாக்களும், பொதுமக்களும் கவலை!
விசேட நிருபர் (இண்டாம் இணைப்பு)
காத்தான்குடி: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, பலத்த போராட்டத்தின் பின்னர் இன்று பிற்பகல் தேசியப் பட்டியல் ரீதியாக பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டதையடுத்து, சற்றுமுன்னர் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் ஊர்வலமொன்று இடம்பெற்றது.
பிரதான வீதியிலும், உள்ளுர் வீதிகளிலும், ஊர்வலம் வந்து, பட்டாசுகள் வெடிக்கவைத்து, ஊரைப் புகைமண்டளமாக்கி, தங்களது பகைவர்களை நோக்கி அடிதடி வேட்டைகளையும் மேற்கொண்டிருந்தனர். அதுமாத்திரமன்றி, தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயலுக்குள்ளும் சென்று அங்கு மஹ்ரிப் தொழுகையில் ஈடுபட்டிருந்த இறையடியார்கள் மீது தாக்குதல்களையும் மேற்கொண்டு, அங்கிருந்தவர்களுக்கு தங்களது மறைப்பு அவயங்களையும் காட்டி அசிங்கப்படுத்தி இருந்தனர்.
இச்சம்பவங்கள் இடம்பெற்ற 3 மணிநேரங்களுக்குள் இச்சம்பவத்தை நிறுத்திக்கொள்ள ஹிஸ்புல்லாஹ்விடம் இருந்து எந்த கட்டளையும் வரவில்லை.
கடந்த 18ம் திகதி காலை, வெற்றிக்களிப்புடன் இத்தகைய அடிதடி ஊர்வல ஏற்பாடு ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும், துரதிஷ்டமாக ஹிஸ்புல்லாஹ் தோல்வியைத் தழுவியதையடுத்து, அடிதடி ஊர்வலம் ஏமாற்றத்தில் அமைந்தது.
ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அடிதடி ஊர்வலத்தில் தாக்குதலுக்குள்ளானவர்
அதற்காக தருணம் பார்த்திருந்த வேளையில் இன்று மாலை ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உறுப்புரிமை தேசிய பட்டடியலில் இணைந்துகொண்டதால், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “பிளான்” இன்று மாலை நடைமுறைப்படுத்தப்பட்து.
அடிதடி ஊர்வலம் நிறைவுக்கு வரும்வரைக்கும் சட்டத்தையும், ஒழுங்கையும் கடைப்பிடிக்க வேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்த்தனர். இருந்தும் எதிர்த்தரப்பின் அவசர வேண்டுகோளுக்கிணங்க பொலிஸாரும் அதிரடிப்படையினரும் ஆங்காங்கே ஊருக்குள் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த அடிதடி ஊர்வலத்தில் சிலர் பலத்த காயங்களுக்குள் உள்ளாகி இருக்கின்றனர். கற்பிணிப்பெண் ஒருவரும் பலத்த காயங்களுக்குள் உள்ளாகி இருக்கின்றார். காயப்பட்டவர்கள் மருத்துவமைனயில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர் ஒருவர் தே.தௌ.ஜ. பள்ளிவாயலுக்கு முன்னாள் ஆபாசத்துடன்…
இச்சம்பவங்கள் குறித்து காத்தான்குடி பொதுமக்களும் உலமாக்களும் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொழுகை நேரத்தில் NTJ பள்ளிவாயலுக்குள் தாக்குதல் மேற்கொண்ட ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர் ஒருவர்
Leave a comment