Category: Your Kattankudy
-
பிரித்தானியாவைத் தாக்கும் புயல்!
MJ லண்டன்: பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் தற்பொழுது குளிர்காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. இன்னும் கடுமையான குளிரை எதிர்நோக்காத நிலையில் பிரித்தானியாவில் பலத்த சுழல் காற்றுடன் கூடிய மழையும் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது.
-
ரிதிதென்ன மையவாடி எல்லை வேலி அமைப்பதற்க்கான நிதி உதவி வேண்டுகோள்
ரிதிதென்ன: ரிதிதென்ன எனும் முஸ்லிம் கிராமமானது, பொலன்னறுவை-மட்டக்களப்பு வீதியில், கதுருவலயிலிருந்து 37கிமீ தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. இதில் மொத்தமாக 380 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவ்வூருக்கு சொந்தமான மையவாடியானது, இங்குள்ள இரண்டு ஜும்ஆ பள்ளிவாயல்களினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
-
கல்முனை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!
ஹாசிப் யாஸீன், எம்.எம். ஜபீர் கல்முனை: கல்முனை மக்களின் நீண்ட கால குறையாகவிருந்த வரும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் முன்னெடுத்து வருகின்றார். இதற்கமைவாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 3 கோடி 90 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை காசீம் வீதி காபட் வீதியாகவும், தைக்கா வீதி வடிகான் வசதிகளுடன் கொங்ரீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
-
எஸ்.ஆர்.டீ. மற்றும் காத்தான்குடி மீடியா போரத்திற்கும் இடையிலான சந்திப்பு
எ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி கல்விமான்களை உள்ளடக்கியதான ஆய்வுக்கும், அபிவிருத்திற்குமான அமைப்புக்கும் காத்தான்குடி மீடியா போரத்திற்கும் இடையிலான சந்திப்பு (04.12.2015 வெள்ளி) இரவு காத்தான்குடி கடற்கரை ஜூமைறா பிளெசில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) இன் 85 வது ஆண்டு நிறைவு விழா
ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) இன் 85 வது ஆண்டு நிறைவு விழாவின் நிகழ்வுகள் அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் மிக விமர்சையாக கெப்டன் யூ.எல்.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்றது பிரதம அதிதியாக மீழ் குடியேற்ற புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.
-
“குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் பனிப்பெண்களை அனுப்பக்கூடாது”
கொழும்பு: சவூதி அரேபியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்களை அனுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித்.பி.பெரேரா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
-
சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?
சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
இன நல்லுறவுக்கான கல்முனை பிரதேச அபிவிருத்தி கூட்டம்
ஹாசிப் யாஸீன் கல்முனை: பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனைக்கமைவாக கல்முனை தொகுதியின் மூன்று பிரதேச செயலகங்களையும் ஒன்றிணைத்து முதற்தடவையாக இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (04) கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
“வறுமைக்குப் பயந்து பெறுமதிமிக்க கல்வியினை கைவிட்டு விடக் கூடாது”: சிப்லி
ஏ.எல். டீன்பைருஸ் காத்தான்குடி: கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி பிரதேச கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை மட்/ மம/ அலிகார் வித்தியாலயத்திற்காக சுமார் 120,000/= பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பிரின்டர் என்பன வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் கலந்து கொண்டார்.
-
நாற்பத்தொரு வருடங்கள் கடந்த பின்னரும் மனதை விட்டு இன்றும் நீங்காத ஹஜ் விமான விபத்து!
மஸ்கெலியா: 1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடையச் செய்த சம்பவம் அது. இந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு மக்கா நோக்கிப் பயணித்த மார்டின் எயார் டீ.சீ. 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி…
-
மீரா பாலிகா மகா வித்தியாலய விவகாரத்தில் NTJ கையாண்ட வழிமுறை சரியானதா?
– NTJ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அன்புள்ள சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ் அண்மையில் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் நான்கு மாடி ஆராதனை மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா என இரு விழாக்கள் நடைபெற்றதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்விழாவில் ஆலிம்கள், அரசியல்வாதிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
-
இங்கிலாந்து: அஸ்லம் பேரீத்தம்பழ இழுபறியும் சலசலப்பும்
அன்பான சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் எமது தளத்தில் நேற்று முன்தினம் (02-12-2015) பிரசுரிக்கப்பட்ட “இங்கிலாந்து: அஸ்லமும் பேரீத்தம்பழ இழுபறியும்” எனும் ஆக்கம் பிரசுரிக்கப்பட்ட பின்னர், இங்கிலாந்தின் ரெடிங் நகரில் அமைந்துள்ள அஸ்லம் நிர்வாக உறுப்பினர் சிலருக்குள் சலசலப்புக்கள் ஏற்பட்டிருப்பதை மிகத் தெளிவாக அறிய முடிகிறது.