“வறுமைக்குப் பயந்து பெறுமதிமிக்க கல்வியினை கைவிட்டு விடக் கூடாது”: சிப்லி

  • ஏ.எல். டீன்பைருஸ்

shiblyகாத்தான்குடி: கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி பிரதேச கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை மட்/ மம/ அலிகார் வித்தியாலயத்திற்காக சுமார் 120,000/= பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பிரின்டர் என்பன வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் கலந்து கொண்டார்.

பாடசாலையில் ஒரு போட்டே கொப்பி இயந்திரம் இல்லாததன் காரணமாக காரியாலய பணிகளை செய்வதில் தாங்கள் பாரிய சிரமங்களையும், செலவினங்களையும் அடைந்தொம் ஆனால் அந்த குறை இன்று கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் இன் மூலமாக நிவர்த்தியாகி உள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் எம்.றசாக் தெரிவித்தார்.

shibly

மேற்படி நிகழ்வு பாலமுனை மட்/மம/அலிகார் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.றசாக் தலைமையில் நடைபெற்றது. அதிதிகளாக பொறியியலாளர் சிப்லி பாறூக்,ஆசிரிய ஆலோசகர் எம்.ஜவாட்,பாடசலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

shibly2

பாலமுனை ஒரு பின்தங்கிய பிரதேசம் மாத்திரமின்றி இங்கு கல்வி பயில்கின்ற மாணவர்கள் பல கஷ்டமான சூழ்நிலைகளில் கல்வி கற்று வருகிறார்கள் என எனக்கு முன் பேசிய பலர் இங்கு குறிப்பிட்டனர்.

இவ்வாறான பாடசாலைக்கு எமது மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின மூலம் உதவக்கிடைத்தமையானது பெரும் பாக்கியமாக நான் கருதுகின்றேன் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

shibly1

இலங்கையை பொறுத்த மட்டில் இலங்கையின் எமுத்தறிவு, கல்வி மட்டம் என்பது 85ம% வீதத்தினை தாண்டியுள்ளது. இதற்கான காரணம் இலவச கல்வி,இலவச சீருடை என்பனவும் ஒரு காரனமாகும். பின்தங்கிய பிரதேசம் என்பதனால் வறுமைக்கு அஞ்சி யாரும் தங்கள் கல்வியினை விட்டு ஒதுங்கி விடக் கூடாது. கல்விதான் மிகப் பெரிய சொத்தாகும்

இதற்கு மிகப் பெரிய உதார புருஸர்தான் மறைந்த மாபெரும் அறிஞர்,விஞ்ஞானி அப்துல் கலாம். அவர் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் மிகவும் வறுமையோடு ,கஷ்டங்களோடு தன் கல்வ்pயினை அவர் தொடர்ந்ததன் காரணமாக த்தான் உலகம் தன்னை திரும்பி பார்க்கும் அளவுக்கு அவர் புகழ்பெற்ற விஞ்ஞானியாக மாறினார்.

எனவேதான் வறுமை,கஷ்டம், பின்தங்கிய பிரதேசம் என்ற விடயங்களுக்கு அப்பால் மாணவர்களாகிய நீங்கள் படித்து முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

இப்பாடசாலை மாணவர்கள் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 3 மாணவர்கள் 150 மேற்பட்ட புள்ளிகளையும், சுமார் 12 மாணவர்கள் 100 க்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றதாக இங்கு என்னடம் தெரிவித்தனர் நான் மிகவும் சந்தோஷமடைகின்றேன். இமமாணவர்கள் தான் மிகவும் திறமைசாலிகள் எனவே இவர்களின் எதிர்கால கல்வி சிறப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தினை விட இந்த நல்லாட்சியில் கல்விக்காக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டள்ளது. மேலும் இப்பாடசாலைக்கு பல தேவைகள் இருப்பதாக குறிப்பிட்டீர்கள் எதிர்காலங்களில் எங்களால் முடிந்த உதவிகளை நிச்சயம் பெற்றுத் தருவோம் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

Published by

Leave a comment