பிரித்தானியாவைத் தாக்கும் புயல்!

  • MJ

rain londonலண்டன்: பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் தற்பொழுது குளிர்காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. இன்னும் கடுமையான குளிரை எதிர்நோக்காத நிலையில் பிரித்தானியாவில் பலத்த சுழல் காற்றுடன் கூடிய மழையும் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது.

இந்நிலை தற்பொழுது மோசமடையக்கூடிய அபாயம் இருப்பதாகவும், வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் சூறாவளித் தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய அபாயம் இருப்பதாகவும், கனத்த மழை காரணமாக இப்பகுதிகளில் பாரியளவிலான வெள்ள அபாயம் ஏற்பட இருப்பதாகவும் கம்பேரியா பொலிஸ் இந்த அபாய அறிவிப்பை சற்றுமுன் விடுத்திருக்கின்றது.

rain london

Published by

Leave a comment