எஸ்.ஆர்.டீ. மற்றும் காத்தான்குடி மீடியா போரத்திற்கும் இடையிலான சந்திப்பு

  • எ.எல். டீன்பைரூஸ்

media forumகாத்தான்குடி: காத்தான்குடி கல்விமான்களை உள்ளடக்கியதான ஆய்வுக்கும், அபிவிருத்திற்குமான அமைப்புக்கும்  காத்தான்குடி மீடியா போரத்திற்கும் இடையிலான சந்திப்பு (04.12.2015 வெள்ளி) இரவு காத்தான்குடி கடற்கரை ஜூமைறா பிளெசில் இடம்பெற்றது.

மகப்பேற்று சத்திர சகிச்சை நிபுணரும்,வைத்திய அறிஞலுமான டாக்டர் எம்.சிறாஜ் அவர்களை பௌண்டராக கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மேற்படி ஆய்வுக்கும், அபிவிருத்திற்குமான அமைப்பின் உறுப்பினர்களாக கல்விமான்கள்,அறிஞர்கள் பலர் இருந்து செயல்பட்டு வருவதுடன் அதன் தலைவர் வைத்தியர் அப்துல்ஹாதி, வைத்தியர்களான டீ.எம்.மாஹிர், எம் ஜலால்தீன்,எல்.எம்.ஸனீஜ், பொறியியலாளர் எம்.தௌபீக்,தென்கிழக்க பல்கலை கழக விரிவுரையாளர எம்.எம்.மன்சூர,முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.சாஹிர் ஹூசைன் ஆகியோர்கள் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டனர்.

media forum

மேற்படி அமைப்பின் பணிகளில் மிகவும் பிரதானமாக மாணவர்களின் பல்கலை கழக அனுமதியை அதிகரிக்க செய்வது,பொது மக்களுக்கான இலவச வைத்திய முகாம்களை நடாத்துதல்,பெண்னோயியல்,மகப்பேற்று தொடர்பாக பெண்களுக்காக,பாடசாலை,மதரசா மாணவிகளுக்கு என இலவச வைத்திய ஆலோசனைகளை வழங்கி வருவதுடன் பல்வேறு பட்ட சமூகப்பணிகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.

காத்தான்கடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்தி குழு,காத்தான்குடி பள்ளிவாயர்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனம் என்பவற்றில் ஆலோசனையோடு கூடிய கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடனான பல்வேறு பட்ட அபிவிருத்தி பணிகளையும்,ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை ஆய்வுக்கும், அபிவிருத்திற்குமான அமைப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காத்தான்குடி ஆதார வைதிய சாலையில் காணப்படும் ஆளனி பற்றாக்குறை,பௌதீக வளங்கள், மாகாண மாவட்ட மட்டத்தில் இளைக்கபடும் புறக்கணிப்புகள் தொடர்பில் விரிவாக போசப்பட்டதுடன் இது விடயமாக அரசியல்வாதிகள்,உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து பேசுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நாளை காத்தான்குடிக்கு விஜயம் மேற் கொள்ள இருக்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களிடம் இது தொடர்பில் விரிவாக பேசுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆய்வுக்கும், அபிவிருத்திற்குமான அமைப்பின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதனை இட்டு காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Published by

Leave a comment