அஸ்ஸலாமு அலைக்கும்
எமது தளத்தில் நேற்று முன்தினம் (02-12-2015) பிரசுரிக்கப்பட்ட “இங்கிலாந்து: அஸ்லமும் பேரீத்தம்பழ இழுபறியும்” எனும் ஆக்கம் பிரசுரிக்கப்பட்ட பின்னர், இங்கிலாந்தின் ரெடிங் நகரில் அமைந்துள்ள அஸ்லம் நிர்வாக உறுப்பினர் சிலருக்குள் சலசலப்புக்கள் ஏற்பட்டிருப்பதை மிகத் தெளிவாக அறிய முடிகிறது.
அஸ்லம் அமைப்பின் செயலாளரிடமிருந்து நேற்று மாலை கிடைக்கப்பெற்ற அதிருப்தி கடிதத்திற்கு எமது செய்திப் பதிவேற்ற உறுப்பினரால் பதில் கடிதம் குறித்த அமைப்பின் செயலாளருக்கு உடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆக்கம் தொடர்பில் தங்கள் அமைப்பிற்கு அதிருப்தி இருக்குமானால், அல்லது இக்கட்டுரையை மறுத்தால் தாங்கள் எந்த விடயத்தில் அதிருப்தியடைந்திருக்கின்றீர்கள் அல்லது எந்த விடயங்களை மறுக்கின்றீர்கள் என்பதை எங்களுக்கு அறியத்தரும்படி (சுருக்கமாக) நாம் அனுப்பி வைத்துள்ளோம்.
மறுப்பறிக்கை தமிழில் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
அஸ்லம் அமைப்பின் “ஈத்தம்பழ விடயம்” தொடர்பாக எமக்கு கடந்த ஜூலை மாதம் (2015) தொடக்கம் பல மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அஸ்லம் அமைப்பிடமிருந்து மறுப்புக் கடிதம் கிடைக்கப்பெற்றால் இன்ஷா அல்லாஹ் மறுப்பறிக்கையை மகிழ்ச்சியுடன் பிரசுரிக்க நாம் தயாராக இருக்கின்றோம்.
அல்லது எமது கட்டுரையை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்!
நன்றி
என்றென்றும் அன்புடன்,
நிர்வாகம்
![A-hand-writing-with-a-pen-006[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/a-hand-writing-with-a-pen-0061.jpg?w=150&h=90)
Leave a comment