ரிதிதென்ன மையவாடி எல்லை வேலி அமைப்பதற்க்கான நிதி உதவி வேண்டுகோள்

cemetery rithithannaரிதிதென்ன: ரிதிதென்ன எனும் முஸ்லிம் கிராமமானது, பொலன்னறுவை-மட்டக்களப்பு வீதியில், கதுருவலயிலிருந்து 37கிமீ தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. இதில் மொத்தமாக 380 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவ்வூருக்கு சொந்தமான மையவாடியானது, இங்குள்ள இரண்டு ஜும்ஆ பள்ளிவாயல்களினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 25 வருடங்களாக பாவனையில் இருந்துவரும் இந்த மையவாடியானது, எந்தவித எல்லை வேலிகளும் இல்லாத காரணத்தினால், மையவாடியின் அருகாமையில் உள்ள காடுகளிலிருந்துவரும் மிருகங்கள் இரவு நேரங்களில் கப்ருகளின் மேலுள்ள மண்களை தோண்டி கப்ருகளை சேதப்படுத்துகின்றன. பகல் நேரங்களில், மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடுகளும், மாடுகளும் மையவாடியை அசுத்தப்படுத்துவதோடு, மேய்ச்சல் நிலமாகவும் பாவிக்கப்படுகின்றது. இது நீண்ட காலமாக இருந்துவரும் பாரியதொரு பிரச்சினையாகும். இவ்வாறு காட்டு மிருகங்களினால் கப்ருகள் சேதப்படுத்தப்படுவதை தவிப்பதற்க்கான தற்காலிக தீர்வாக, ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டபின் கப்ருகளின் மேல் முற்களைக் கொண்ட மரங்களின் கிளைகள் இடப்படுகின்றன (இதனை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படங்களில் கானமுடியும்).

cemetery rithithanna

மேற்படி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகானவும், மையவாடி நிலத்தை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்காகவும், எல்லை வேலி அமைப்பது மிகவும் அவசரமான தேவையாக உள்ளது. இதன் சுற்றளவு 1596 அடிகளுமாகும். இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்க்கு ரூபா 725,560/- பணம் தேவையாக உள்ளது. இதனை நிர்வகித்துவரும் இரண்டு ஜும்ஆ பள்ளிவாயல்களும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால், பொதுமக்களின் உதவியின்றி இத்திட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் அசாத்தியமானதொரு விடயமாகும்.

janaza makbarah cemetery

அன்புள்ளம் கொண்ட அனைத்து சகோதர, சகோதரிகளையும் தங்களால் முடிந்த நன்கொடைகளை, மேற்படி திட்டத்திற்க்காக, இரண்டு ஜும்ஆ பள்ளிவாயல்களும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள கீழ்க்குறிப்பிட்ட வங்கிக்கணக்கிற்க்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டபின், கணக்கு விபரங்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தொடர்புகள்: 077 3639 503 / 077 1144 239

Bank Details:

Bank: Amana Bank

Branch: Oddamavadi Branch

Account Name: A.L.Abdul Majeed / K.M.S.Kamaldeen

Account Number: 011 0143232 001

Estimate:

Concrete Posts: 286 Nos. x Rs.660/- = 188,760/-

Chain Link Fence: 32 Rolls x Rs. 13,400/- = 428,800/-

Steel Gate: Rs. 23,000/- Labour: Rs. 85,000/-
Total Required Amount Rs. 725,560/-

Published by

Leave a comment