காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

  • எம்.எச்.எம். அன்வர்

chidren dayகாத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு 14.12.2015 இல் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. ஒக்டோபர் 01 சிறுவர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை ரீதியில் கணித விஞ்ஞான தேசப்பட மற்றும் இஸ்லாம் போன்ற பாடங்களில் போட்டி நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. இதில் சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டதுடன் வெற்றிபெற்றவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் எம் எஸ் ஜாபிர், உதவிப்பிரதேச செயலாளர் அகமட் அப்கர், பிரதேச செயலக கணக்காளர் திட்டமிடல் பணிப்பாளர் நிருவாக உத்தியோகத்தர், திவினெகும முகாமையாளர் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

chidren daydrama

Published by

Leave a comment