- பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் 2015 மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா 17-12-2015 வியாழக்கிழமை காலை 09.மணிக்கு மட்டக்களப்பு நவற்குடா இந்து கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி மாவட்ட இலக்கிய விழாவில பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை,கலைப்பண்பாட்டுப் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் கலந்து கொள்ளவுள்ளார்.
இங்கு பரத நாட்டிய கலாலயா மாணவிகளின் வரவேற்பு நடனம்,காத்தான்குடி பிரதேச கலாசார நிலையத்தின் கிராமியப் பாடல்,மாவட்ட இலக்கியப் போட்டி பாலர் பிரிவில் முதலிடம் பெற்ற கவிதைப் பாடல்,மட்டக்களப்பு இந்து கலாசார நிலைய மாணவிகளின் (கும்மி) கிராமிய நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment