ஷெல்சி முகாமையாளர் ஜோஸ் மொரின்ஹோ வெளியேற்றப்பட்டார்!

  • MJ

jose mourinhoலண்டன்: கடந்த வருட ஆங்கில பிரிமியர் லீக் சம்பியனும், இங்கிலாந்தின் முன்னணிக் கழகங்களுள் ஒன்றுமான ஷெல்சி (Chelsea) கழகத்தின் முகாமையாளர் (Manager) ஜோஸ் மொரின்ஹோ சற்று முன்னர் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த 2013 இல் ஷெல்சி கழகத்துக்கு முகாமையாளராக நியமிக்கப்பட்ட மொரின்ஹோ, கடந்த வருடம் தனது முகாமைத்துவத்தின் கீழ், ஷெல்சி அணியை மீண்டுமொரு முறை ஆங்கில அணிகளின் சம்பியனாகத் திகழ்த்திக் காட்டினார்.

இவ்வருடம் இடம்பெற்று வரும் ஆங்கில பிரிமியர் லீக் போட்டிகளில் பல தோல்விகளைத் தொடராகச் சந்தித்து, 20 அணிகளின் பட்டியலில் 16ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றது ஷெல்சி அணி.

இதன்காரணமாக அண்மைக்காலமாக ஷெல்சி ரசிகர்களினதும், நிர்வாகத்தினரதும் சர்ச்சைகளுக்கு ஜோஸ் மொரின்ஹோ உட்பட்டிருந்த வேளையிலேயே சற்று முன்னர் அவரை கழகத்திலிருந்து ஷெல்சி வெளியேற்றிருக்கின்றது.

jose mourinho
Enter a caption

ஜோஸ் மொரின்ஹோ

52 வயதான மொரின்ஹோ, போர்த்துக்கள் நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஷெல்சியின் முகாமையாளராக இதற்கு முன்னர் 2004-2007 காலப்பகுதியில் நியமனம் பெற்றிருந்தார். மொரின்ஹோவின் அன்றைய முகாமைத்துவத்தின் கீழ் ஷெல்சி பல வெற்றிகளை அன்று தக்கவைத்துக்கொண்டிருந்தது.

Bபெனிபிஸா, போர்டோ, இன்டர் மிலான் மற்றும் ரியல் மெட்ரிட் போன்ற உலகப் புகழ்பெற்ற கழகங்களுக்கு ஜோஸ் மொரின்ஹோ முகாமையாளராக இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment