கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் காலமானார்

Asgiriya monkகண்டி: கண்டி அஸ்கிரிய பெளத்த பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார். கீழே நிலத்தில் விழுந்த நிலையில், கண்டி போதனா மருத்துமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அஸ்கிரிய பீடத்தின் 21 மகாநாயக்கரான கலகம அத்ததஸ்ஸி தேரர், 1922-ம் ஆண்டில் பிறந்தவர். 20-வது மகாநாயக்கரான உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் கடந்த ஆண்டு காலமானார்.

Asgiriya monk

இலங்கை அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்க பௌத்த பீடங்களில் அஸ்கிரிய பீடமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment