“பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்”

indiapakistananotherflag12[1]கொல்கத்தா: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெற உள்ள டி 20 போட்டிகள், கொல்கத்தாவில் நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.முன்னர் அந்தப் போட்டிகள் இந்த மாதம் 19ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் அணியினருக்கு அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி அங்கு செல்வதில் தாமதமாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுக்களை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக நேற்று இந்தியா சென்றிருந்த பாகிஸ்தான் குழு ஒன்று அது பற்றிய அறிக்கை ஒன்றை தமது உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது என முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள பத்தான்கோட் விமானப் படை தளத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட படையினரில் சிலர் ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் வடபகுதி மாநிலமான தரம்சாலாவில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு உள்ளுரில் கடும் எதிர்ப்புகள் இருந்ததாகவும் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாதிகளே காரணம் என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக உள்ளுரில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் உள்ளதாக தெரிவித்த தமர்சாலா முதல்வர் அவர்களுக்கு பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிப்பதற்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடக்கவிருந்த குறித்த போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

Published by

Leave a comment