பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா செல்லவுள்ளது

Eden_Garden_kolkataகொல்கத்தா: இந்தியாவில் நடந்துவரும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது தொடர்பில் சில வாரங்களாக நிச்சயமற்ற தன்மை நிலவிய சூழலில், தமது அணி அந்தப் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு பயணிக்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களின் பாதுகாப்பிற்கு பகிரங்க உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவிடம் கோரியிருந்தனர்.

இந்து கடும்போக்குவாத குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவலைகளை அடுத்து இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், தரம்சாலாவில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 19-ம் திகதி இரு அணிகளும் மோதுகின்றன.

Eden_Garden_kolkata
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான நுழைவாயில்

Published by

Leave a comment