Category: Your Kattankudy
-
காத்தான்குடியில் வெள்ள நிவாரண நிதிசேகரிப்பு பணி
S. சஜீத் காத்தான்குடி: தற்போது தமது நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்த பாதிப்புக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் (19.05.2016) நேற்றைய தினம் பாரிய நிதிசேகரிப்புப் பணி வீதி வீதியாக வளம் சென்றன.
-
கேகாலை நிலச்சரிவுகள்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு
கேகாலை: கேகாலை மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவதினர் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெகியோவிட்ட, புளத்கோபிட்டிய மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேசங்களில் இடம் பெற்ற இந்த நிலச்சரிவுகளின் பின்னர் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளன எனவும் அரசு கூறுகிறது.
-
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவ காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு
எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: அசாதாரண காலநிலை காணமாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவ காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தமது இருப்பிடங்களை இழைந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு தற்காலிகமாகவேனும் உதவும் முகமாக உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கு காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த உதவிகள் இன, மத பேதங்களுக்கு அப்பால் மனித நேய அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
-
பொத்துவில் வாழ் மக்களுக்கான அவசர செய்தி
சப்னி, சம்சுல் ஹுதா பொத்துவில்: மழை வெள்ளம் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நம் சொந்தங்களுக்காக உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்கள் இன்றைய ஜூம்மா தினத்தில் பொத்துவில் பெரிய பள்ளிவாயலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் உங்களால் முடிந்த சிறு தொகை பணத்தினை இட்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
-
நீங்களும் விளம்பரம் செய்யலாம்-திக்ரா இஸ்லாமிய காலாண்டு சஞ்சிகையில்
பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் திறமையான முஸ்லிம் உலமாக்களை உருவாக்கிவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியினால் இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் 2ம் திகதி வெளியிடப்படும் திக்ரா இஸ்லாமிய காலாண்டு சஞ்சிகையில் தங்களது ஆடை விற்பனை நிலையம் உள்ளிட்ட வியாபார ஸ்தாபனங்கள்,இணையத்தளங்கள்,கல்லூரிகள்,கல்வி நிலையங்கள்,ஹஜ்,உம்ரா ட்ரவல்ஸ் உள்ளிட்டவைகளின் விளம்பரங்களை பிரசுரிக்க விரும்புவோர் எதிர்வரும் 23-05-2015ம் திகதிக்கு முன்னர் முன் கூட்டி பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
-
‘இலவச உம்றா’ திட்டத்தில் ‘இவரும்’ போகிறார்..?
காத்தான்குடி: ஹிறா பௌன்டேஷனின் ஏற்பாட்டிலும், மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலிலுமாக இடம்பெற்று வரும் ‘வறிய இமாம்கள் முஅத்தின்களுக்கான இலவச உம்றா’ திட்டத்தில், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் முன்னாள் தலைவரும், முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நகர சபை வேட்பாளருமான அல்ஹாஜ் (ஏற்கனவே இவர் ஹஜ்ஜுச் செய்ததால் இந்த சிறப்புப் பெயர் இவரது பெயருக்கு முன்னால் இடம்பெறுகிறது) எம்.ஐ.எம். சுபைர் CC…
-
பக்கவாதத்தின் தீவிரத்தை குறைக்கும் அஸ்பிரின் மருந்து
லண்டன்: இங்கிலாந்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் சிறிய பக்கவாத (ஸ்ட்ரோக்) அறிகுறியை உணர்ந்த அடுத்த நொடியில் அஸ்பிரின் மருந்தை எடுத்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.முக்கிய நேரங்களில் மற்றும் சிறிய ஸ்ட்ரோக்கை சந்தித்த அடுத்த நாட்களில் அஸ்பிரின் மருந்தை எடுத்து கொண்டால் பெரிய அளவில் பக்கவாதம் வரும் அபாயம் 80 சதவீதம் குறையவும் எனவும் மேலும் தீவிரம் அடையாமல் தவிர்க்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
-
கணிதப் பாட ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்தும் அவரின் இடமாற்றத்தை நிறுத்துமாமாறும் கோரியும் நுழைவாயில் கதவை மூடி ஆர்ப்பாட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆரையம்பதி-பாலமுனை அஷ்ரப் வித்தியாலத்திலுள்ள கணிதப் பாட ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்தும் அவரின் இடமாற்றத்தை நிறுத்துமாமாறும் கோரி அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று 19 வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
-
அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் விடுமுறை!
S.சஜீத் கொழும்பு: தற்போது காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் (20.05.2016) நாளைய தினம் விடுமுறை வழங்குமாறு தற்போது கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கல்வி அமைச்சர், அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தனர்.
-
வெள்ளப்பெருக்கு நிவாரணம் தொடர்பாக பொது மக்களுக்கு சம்மேளனம் அறிவிப்பு
தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகளவான பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி தங்களது வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை நாம் அறிவோம்.
-
இந்தோனேஷியாவில் பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்குக் குறைவான சிறுமிகளில் பாதிக்கும் அதிகமானவர்களுக்கு ஏதோ ஒருவகையான பெண்ணுறுப்பு சிதைப்பு நடந்திருக்கிறது. முன்பு கணித்திருந்ததைவிட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்.