கேகாலை நிலச்சரிவுகள்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு

landslideகேகாலை: கேகாலை மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவதினர் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெகியோவிட்ட, புளத்கோபிட்டிய மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேசங்களில் இடம் பெற்ற இந்த நிலச்சரிவுகளின் பின்னர் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளன எனவும் அரசு கூறுகிறது.

தெகியோவிட்ட பகுதியில் புதையுண்ட 6 பேரில் 5 பேரும், புளத்கோபிட்டிய சம்பவத்தில் புதையுண்ட 16 பேரில் 14 பேரும் சடலங்களாக இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கேகாலை மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவதினர் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

landslide

Published by

Leave a comment