‘இலவச உம்றா’ திட்டத்தில் ‘இவரும்’ போகிறார்..?

subair CCகாத்தான்குடி: ஹிறா பௌன்டேஷனின் ஏற்பாட்டிலும், மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலிலுமாக இடம்பெற்று வரும் ‘வறிய இமாம்கள் முஅத்தின்களுக்கான இலவச உம்றா’ திட்டத்தில், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் முன்னாள் தலைவரும், முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நகர சபை வேட்பாளருமான அல்ஹாஜ் (ஏற்கனவே இவர் ஹஜ்ஜுச் செய்ததால் இந்த சிறப்புப் பெயர் இவரது பெயருக்கு முன்னால் இடம்பெறுகிறது) எம்.ஐ.எம். சுபைர் CC , உள்வாங்கப்பட்டு இலவச உம்றாவுக்கு பயணமாகின்றார்.

கடந்த 17.05.2016 மேற்படி பள்ளிவாசலில் இடம்பெற்ற இஷா தொழுகையின் பின்னர் இவர் தொழுகைக்கு வந்திருந்த ஜமாஅத்தாரிடம் முஸாபஹா, முஆனகா செய்து கொண்டதாக அவரை முஸாபஹா செய்த ஒருவர் தகவல் தெரிவித்தார்.

வாழ்க்கையில் ஒரு தடவையேனும் ஹஜ் அல்லது உம்றா செய்ய முடியாதளவு ஏழ்மையிலுள்ள இமாம்கள் மற்றும் முஅத்தின்களே இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

(வாரஉரைகல்)

 

Published by

Leave a comment