-
S. சஜீத்
காத்தான்குடி: தற்போது தமது நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்த பாதிப்புக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் (19.05.2016) நேற்றைய தினம் பாரிய நிதிசேகரிப்புப் பணி வீதி வீதியாக வளம் சென்றன.
இவ் மகத்தான பணி இன, மத, மொழி பேதங்களைக் கடந்தும் இடம்பெற்ற போது பெரும் திரளான மக்கள் பணத்தினை வசூளிக்கச் சென்ற ஜமாஅத் உறுப்பினர்களிடம் அவர்களது நிதி உதவிகளை வாரி வழங்கினர்.