Category: Your Kattankudy
-
மத்தள விமான நிலையத்தின் கடைகள் இழுத்து மூடப்படுகின்றன
மத்தள: திட்டமிடாத அபிவிருத்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் மத்தள ராஜபக்ஸ விமான நிலையத்தில் இருந்த கடைகள் ஜூன் 1ஆம் திகதியில் இருந்து முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்தை சூழ உள்ள கடைகள் ஜூன் முதலாம் திகதியில் இருந்து மூடப்பட்டுள்ளதாகவும், கடை உரிமையாளர்கள் தங்களது பொருட்களை கடைகளில் இருந்து நீக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்திற்கு இதுதான் காரணமாம்
கொழும்பு: கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஆயுதக்கிடங்கில் தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் முகாமுக்கு வெளியில் தீயணைப்பு ஒத்திகை இடம்பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவே குறைந்தளவு சேதத்துடன் இந்த சம்பவத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்துள்ளது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
-
அநுர சேனாநாயகவை மஹிந்த ராஜபக்ச சந்தித்துள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது
கொழும்பு: ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அநுர சேனாநாயக்கவை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
-
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவாரக அமைச்சர் ஹரீன் பெர்ணாட்டோ பதவியேற்பு
பா.திருஞானம் கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சியின், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இன்று (07) பதவியேற்றார். இந்த பதவியேற்க்கும் நிகழ்வு இராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
-
கண்டி நகரில் பள்ளி வாசலில் கோபுரம் நிர்மாணிக்க பௌத்த கடும் போக்காளர்கள் எதிர்ப்பு
கண்டி: கண்டி நகரிலுள்ள பள்ளி வாசலில் கோபுரம் (மினராத்) நிர்மாணிப்பதற்கு அங்குள்ள பௌத்த கடும் போக்காளர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.கோபுர நிர்மாணப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி பள்ளிவாசலுக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை ஆர்பாட்டமொன்றும் நடைபெற்றது. பௌத்த பிக்குமார்கள் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு சில மணி நேரம் பதட்ட நிலை காணப்பட்டது.
-
பூப்பந்து போட்டிகளில் மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்ற அல் ஹிரா வித்தியாலயத்துக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து
காத்தான்குடி: மாகாண மட்ட பூப்பந்து (badminton) போட்டிகளில் மூன்றாம் இடத்தைப் பெற்ற காத்தான்குடி அல் ஹிரா வித்தியாலயத்துக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். பாடசாலை அதிபர் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
-
ஆரையம்பதி மாணவி மீதான பாலியல் சேட்டை விவகாரமும், பரப்பப்படும் அவதூறுகளும் (சம்பந்தப்பட்ட சகோதரரின் நேரடி வாக்குமூலம்)
கடந்த இரண்டு தினங்களாக காத்தான்குடியை சேர்ந்த சகோதரர் நிம்ஸாத் என்பவர் ஆரையம்பதி மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாகவும், பொது மக்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் சர்வசாதாரணமாக பரப்பப்பட்டு வரும் செய்தி குறித்து தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
-
“இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு சேவையாற்ற கூடிய கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர் உருவாக்கபட்டுள்ளார்”
பா.திருஞானம் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவிப்பு தற்போது நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. அதனை செய்வனே நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சரும் கல்வி இராஜாங்க செயற்பட்டு வருகின்றனர். இதில் இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு தமிழ் பிரிவிற்கு சேவையாற்ற கூடிய கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர் உறுவாக்கபட்டுள்ளார் என்று கூறுகின்றார் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்கள்.
-
மஜீத் ரப்பாணிக்கு ஏன் இந்த மரியாதை? ஜெஸீம் ஜே.பி. விளக்கம் தருவாரா?
காத்தான்குடியைச் சேர்ந்த சிறுமி யுஸ்ரி என்பவரை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் அவரது வளர்ப்புத் தாய் மும்தாஜும் தந்தை மஜீத் ரப்பாணியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். நீதிமன்றம் இரு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்க அனுமதித்த போதிலும் மஜீத் ரப்பாணிக்கு மாத்திரமே பிணை நிற்க சிலர் முன்வந்ததால் அவர் மட்டுமே வெளியில் வந்துள்ளார். அவரது மனைவி மும்தாஜ் இன்னமும் சிறையிலேயே உள்ளார்.
-
அருள் சொரியும் அற்புத மாதம்
மதியன்பன் அடிவானிற் பிறை தெரிய அகமெல்லாம் நகை விரிய அல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் – அதை அகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய் விடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து வினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் – நம் வினை யென்னி மனமுருகி அழுவோம்.
-
ஐக்கிய இராச்சிய முஸ்லிம்கள் இன்று நோன்பு நோற்கின்றனர்
லண்டன்: ஐக்கிய இராச்சியத்திலுள்ள (UK) பள்ளிவாயல்கள் திங்கட்கிழமை ரமழான் நோன்பு ஆரம்பிக்கின்றதாக அறிவித்திருக்கின்றன. சவுதி அரேபியாவில் இன்று (05-06-2016) பிறை தென்பட்டதால் அதன் பிரகாரம் இன்றிரவு ரமழான் மாதம் ஆரம்பிக்கின்றதாக அறிவித்திருக்கின்றனர். அங்குள்ள பள்ளிவாயல்களில் இரவுநேரத் தொழுகைக்கான ஏற்படுகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன.
-
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் இரு அறிவித்தல்கள்
அன்புடையீர்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ கண்ணியமும், புண்ணியமும் நிறைந்த றமழான் மாதம் எம்மை வந்தடையவுள்ளது. இச்சந்தர்ப்பம் அல்லாஹூதாஆலா எமக்கு வழங்கியுள்ள அருமையான பாக்கியமாகும். அல்லாஹூதாஆலாவின் அருளையும் பாவமன்னிப்பையும் நரக விடுதலையையும் பெற்றுத்தரும் இம்மாதத்தை கண்ணியமாகக் கழிக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். இவ்வகையில் முன்சென்ற காலங்களில் முஸ்லீம்களும் முஸ்லீம் அல்லாதவரும் இம்மாதத்தின் மகிமையைப் புனிதமாக பேணி நடந்துள்ளனர். அவை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதற்காகரூபவ் கீழ்வரும் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை நன்கு பேணி நடந்துகொள்ளுமாறு அன்புடன்…