மஜீத் ரப்பாணிக்கு ஏன் இந்த மரியாதை? ஜெஸீம் ஜே.பி. விளக்கம் தருவாரா?

majeedகாத்தான்குடியைச் சேர்ந்த சிறுமி யுஸ்ரி என்பவரை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் அவரது வளர்ப்புத் தாய் மும்தாஜும் தந்தை மஜீத் ரப்பாணியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். நீதிமன்றம் இரு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்க அனுமதித்த போதிலும் மஜீத் ரப்பாணிக்கு மாத்திரமே பிணை நிற்க சிலர் முன்வந்ததால் அவர் மட்டுமே வெளியில் வந்துள்ளார். அவரது மனைவி மும்தாஜ் இன்னமும் சிறையிலேயே உள்ளார்.

மஜீத் ரப்பாணியை பிணையில் எடுப்பதற்கு அப்துல் ஜவாத் ஆலிம் ட்ரஸ்ட் நிர்வாகிகள் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டனர். பல சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்தனர். பொருளாதாரத்தை செலவு செய்தனர்.

இவை ஆட்சேபனைக்குரிய விடயங்களல்ல.ஆனால் இன்று மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ள கேள்விதான் மஜீத் ரப்பாணி மீண்டும் அப்துல் ஜவாத் ஆலிம் ட்ரஸ்டின் சகல பொறுப்புக்களிலும் உள்வாங்கப்பட்டுவிட்டாரா என்பதேயாகும்.

அப்படியானால் மஜீத் ரப்பானிக்கு எதிராக முன்னால் நகரசபை உதவி தவிசாளரும் ,அப்துல் ஜவாத் ஆலிம் ட்ரஸ்டின் நிதி முகாமைத்துவ பனிப்பாளர் MIM ஜெஸீம் (JP) 16.03.2016 அன்று விட்ட ஊடக அறிக்கை ஒரு கண்துடைப்பு அறிக்கையா ?

சிறுமி யுஸ்ரியிக்கு மிருகத்தனமான முறையில் சூடுவைக்கப்பட்டும்,சித்திரவதைப்படுத்திய சம்பவம் காத்தான்குடி உட்பட நமது பிரதேச சகோதரர்கள் அனைவரையும் தலைகுனிய வைத்தது அனைவரும் அறிந்த விடயமாகும்.

majeed

மஜீத் ரப்பாணி

இந்த சிறுமிக்கு நீதி வேண்டியும், மிருகத்தனமாக சித்திரைவதை செய்த மஜீத்ரப்பானி மற்றும் அவரது மனைவிக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்க அனைத்து தரப்பினரும் அவர்களால் முடிந்தவகையில் போராடினார்கள் சட்டமும் தன் கடமையை செய்தது.

இந்த விடயத்தில் மஜீத் ரப்பானிக்கும்,அவரது மனைவிக்கு எதிராக அப்துர் ரவூப் மௌலவி தரப்பில் இருந்தும் ஒரு கண்டன ஊடக அறிக்கை 16.03.2016 வெளியிடப்பட்டது.

மஜீத் ரப்பானியின் இந்த நடவடிக்கையை கேள்விப்பட்டு கவளை அடைவதாகவும் அவர்களுக்கு பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அதுவரை அப்துல் ஜவாத் ஆலிம் வளியுல்லாஹ் நம்பிக்கையாளர் பொறுப்பின் சகல பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது உண்மையில் அந்த ஊடக அறிக்கையை பார்த்து நமக்கு சற்று திருப்தியாகவும் சற்று சந்தேகமாகவும் இருந்தது.

ஆனால் மஜீத் ரப்பானி இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் இருந்து வெளியில் வந்து ஒரு வார காலத்துக்குள் மீண்டும் பதுரியா பள்ளிவாயல் மஜ்லிஸின் முன்வரிசையில் அமர வைத்து உயர் அந்தஸ்தத்துக்களும் மரியாதைகளும் கொடுக்கப்பட்டதை பார்த்த அனைவரும் மிகுந்த விசனம் அடைந்தனர்.

எனவேதான் அன்று ஊடக அறிக்கை விட்ட சகோதரர் MIM ஜெஸீம் (JP)யிடமும்,அப்துல் ஜவாத் ஆலிம் ட்ரஸ்ட் நிர்வாகத்திடமும் சில கேள்விகளை கேட்கிறோம்.

16.03.2016 அன்று மஜீத் ரப்பாணிக்கு எதிராக வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி தற்காலிகமாக சகல பொறுப்புக்களிலும் இருந்து இடை நிறுத்திய மஜீத் ரப்பானியை மீண்டும் சகல பொறுப்புக்களிலும் இணைத்துக் கொண்டு விட்டீர்களா ?

சிறைச்சாலையில் இருந்து வந்து ஒருவாரத்திற்குள் மஜீத் ரப்பானியை உங்கள் பள்ளிவாயலில்
இணைத்துக்கொண்டதை தெளிவு படுத்தி ஒரு ஊடக அறிக்கையை வெளியிட முடியாதா ?

நீதிமன்றமே சந்தேக நபராக கருதி கடும் பிணை நிபந்தனையில் விடுவித்த மஜீத் ரப்பானியை குற்றவாளி அல்ல என்று உங்கள் நிர்வாகம் முடிவு செய்ததா ?

அவரை மீண்டும் உங்கள் பள்ளிவாயலில் இணைத்துக் கொண்டதன் காரணம்தான் என்ன ?

ஈவிரக்கமற்ற மிருகத்தனமாக செயற்பாட்டை செய்த, அதனை பார்த்துக் கொண்டு எதுவுமே தெரியாதவராக நடித்த, தனது பெற்ற மகளையே கொடூரத்திலிருந்து பாதுகாக்க திராணயற்ற மஜீத் ரப்பானியை பள்ளிவாயலுக்குள் எடுத்து உயர் அந்தஸ்த்து கொடுக்குமளவு நீங்களும் உங்கள் நிர்வாகத்தினரும் உங்களை பின்பற்றும் பொது மக்களும் கல் நெஞ்சக்கார ர்களா?

உங்கள் பதிலுக்காகவும் ஊடக அறிக்கைக்காகவும் காத்திருக்கிறோம்.

அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத்
காத்தான்குடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s