காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் இரு அறிவித்தல்கள்

அன்புடையீர்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

jammiyya 2கண்ணியமும், புண்ணியமும் நிறைந்த றமழான் மாதம் எம்மை வந்தடையவுள்ளது. இச்சந்தர்ப்பம் அல்லாஹூதாஆலா எமக்கு வழங்கியுள்ள அருமையான பாக்கியமாகும். அல்லாஹூதாஆலாவின் அருளையும் பாவமன்னிப்பையும் நரக விடுதலையையும் பெற்றுத்தரும் இம்மாதத்தை கண்ணியமாகக் கழிக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். இவ்வகையில் முன்சென்ற காலங்களில் முஸ்லீம்களும் முஸ்லீம் அல்லாதவரும் இம்மாதத்தின் மகிமையைப் புனிதமாக பேணி நடந்துள்ளனர். அவை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதற்காகரூபவ் கீழ்வரும் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை நன்கு பேணி நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

01. முஸ்லீம்களாகிய நாம் அனைவரும் தவறாது நோன்பை நோற்றல்.

02. ஐவேளைத் தொழுகையையும் ஒழுங்காகப்பேணி நிறைவேற்றல்.

03. றமழான் மாத கண்ணியத்தை உணர்ந்துரூபவ் உலக விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவதைத் தவிர்த்து அல்குர்ஆன் ஓதுதல்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வணக்க வழிபாடுகளில் அதிகம் ஈடுபடல்.

04. றமழான் மாத பகல்வேளைகளில் அஸர்த் தொழுகை வரை ஹோட்டல்கள் சிற்றூண்டிச்சாலைகளை மூடி றமழான் மாதத்தின் கண்ணியத்தை பேணி ஒத்துழைத்தல்.

05. இளைஞர்கள் கூடி நின்று அமைதிக்கு பங்கம் விளைவிப்பதும் குறிப்பாக பெண்கள் தொழுகைக்காக கூடும் இடங்களில் கூட்டமாக நிற்பதும் தவிர்க்கப்படல் வேண்டும்.

06. றமழானின் கண்ணியத்தை உணர்ந்து பொது இடங்களில் உண்ணுதல், பருகுதல், புகைத்தல், பாடல்களை ஒலிபரப்புதல் மற்றும் வீணான பொழுது போக்குகளில் ஈடுபடுதல் மற்றும் பாதைகளில் விளையாட்டுக்களில் ஈடுபட்டு பாதசாரிகளுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தல் போன்றவற்றை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

07. றமழான் காலங்களில் மட்டுமல்ல எல்லாக்காலங்களிலும் ஹோட்டல்கள் சிற்றூண்டிச்சாலைகள் யாவும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12.00 மணி தொடக்கம் ஜூம்ஆத்தொழுகை முடியும் வரை முழுமையாக மூடப்படுவதுடன் சகலரும் ஜூம்ஆத்தொழுகைக்காக சமூகமளித்தல் வேண்டும் இதே நடைமுறை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டுமென கேட்கப்படுகின்றீர்கள்.

08. இரவு வேளைகளில் வியாபார ஸ்தாபனங்களை நேர காலத்தோடு மூடி இரவு வணக்க வழிபாடுகளில் ஈடுபடல்.

09. வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு அவர்களது மார்க்க கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு, குறிப்பாக றமழான் காலத்திலும் பொதுவாக எல்லாக்காலத்திலும் வசதிகளை

ஏற்படுத்திக்கொடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.

10. பொதுமக்கள் றமழான்காலத்தில் பகல்வேளைகளில் புத்தாடைகளையும் பொருட்களையும் கொள்வனவு செய்யுமாறும், இராக்காலத்தில் வணக்க வழிபாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.

மேற்கூறிய நடைமுறை ஒழுங்குகளை செவிசாய்த்தும் அவற்றை மிக சிறப்பாக பேணி நடந்தும் அல்லாஹ்வின் நல்லருளை பெற்றுக்கொள்ளுமாறு சகலரையும் கணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜஸாகுமுல்லாஹூ கைறன்,
ஜம்இய்யத்துல் உலமா,
காத்தான்குடி. 03.06.2016

— — — — — — — — — — — —- –

தலைவர் / செயலாளர்

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்.

அன்புடையீர்ரூபவ் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் பிறையைத் தீர்மானித்தல் மற்றும் ஐங்காலத் தொழுகைக்குரிய நேரங்களை நிர்ணயித்தல் போன்ற விடயங்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அதன் கீழ் இயங்கும் பிறைக்குழு ஆகியவற்றின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. என்ற போதிலும் பஜ்ர் தொழுகைக்குரிய அதான் குறித்த நேரத்தில் இடம்பெறாது தொழுகை தொழப்படாது பஜ்ர் வேளைக்கு முதல் இடம்பெறுவதாகவும் அவ்வாறு இடம்பெறுவது பிழையான நடைமுறை என்றும் ஊரிலுள்ள ஒரு சிலர் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதனை பிழையான விடயம் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானங்களையும் வழிகாட்டல்களையும் கடைப்பிடிக்குமாறு சகலரையும் ஜம்இய்யதுல் உலமா அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றது.

எனவே, பொது மக்களாகிய நீங்கள் இப்பிரச்சாரங்களினால் குழப்பங்களுக்குள்ளாகத் தேவையில்லை என்றும்; புனித றமழான் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு அல்லாஹூத்தஆலாவின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

ஜஸாகுமுல்லாஹூ கைறன், ஜம்இய்யத்துல் உலமா, காத்தான்குடி. 05.06.2016

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s