மத்தள விமான நிலையத்தின் கடைகள் இழுத்து மூடப்படுகின்றன

mattalaairport_closedமத்தள: திட்டமிடாத அபிவிருத்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் மத்தள ராஜபக்ஸ விமான நிலையத்தில் இருந்த கடைகள் ஜூன் 1ஆம் திகதியில் இருந்து முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்தை சூழ உள்ள கடைகள் ஜூன் முதலாம் திகதியில் இருந்து மூடப்பட்டுள்ளதாகவும், கடை உரிமையாளர்கள் தங்களது பொருட்களை கடைகளில் இருந்து நீக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தின் போக்குவரத்து துளித்துளியாக குறைந்து வருவதாகவும், தற்போது 2 எம்.ஆர்.ஐ.ஏ விமானங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விமானங்களுமே தற்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும்,பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றி சுற்றுலாப் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

mattalaairport_closed

Published by

Leave a comment