கொழும்பு: கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஆயுதக்கிடங்கில் தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் முகாமுக்கு வெளியில் தீயணைப்பு ஒத்திகை இடம்பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவே குறைந்தளவு சேதத்துடன் இந்த சம்பவத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்துள்ளது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் விசாரணை செய்ய நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு மேலதிகமாக தமக்கு எதனையும் கூறமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீப்பரவல் சம்பவத்தில் ஒரு படைவீரர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
இந்தநிலையில் நூறுவீத பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பிரதேச மக்கள் இராணுவ முகாம் பகுதியில் மீள்குடியேறியுள்ளார்கள் என்றும் ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
Published by

Leave a comment