Category: Your Kattankudy
-
இரகசியங்களை பார்வையிட கால்கடுக்க காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்!
கொழும்பு: ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக பெருந்திரளான மக்கள் நீண்ட நேரமாக மாளிகையின் முன்பாக காத்திருந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை கடந்த 6ஆம் திகதியிலிருந்து மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதித்திருந்தார்.
-
உலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்காவின் வீடும் இடம் பிடிப்பு
கொழும்பு: உலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் வீடும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேற்கிந்திய வீரர் கிரிஸ் கெய்ல், அவுஸ்திரேலியாவின் சேன்வோர்ன், சச்சின் டெண்டுல்கர், பிரட்லீ, டேவிட் வோர்னர் , மைக்கல் கிளார்க், சேர்ன் வொட்சன், சவுரவ் கங்குலி, ரிக்கி பொண்டிங், இவர்களுடன் இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்ககாரவின் வீடும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
இனிமேல் ஓ லெவல் பெயில் ஆகுவது கிடையாது
கொழும்பு: எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
-
ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு, 50 பேர் பலி
ஒர்லாண்டோ: அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார். அந்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் காவல்துறையினரை நோக்கி சுட்டார் என்றும் கூறப்படுகிறது.
-
முச்சக்கரவண்டி மஞ்சந்தொடுவாயில் விபத்து.
எம்.ரி.எம்.யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி இன்று காலை 12.06.2016 விபத்துக்குள்ளானது.
-
பெண்களுக்கான மார்க்க விளக்க வகுப்பு
இன்ஷா அல்லாஹ் இன்று (12.06.2016) காலை 9:30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை பெண்களுக்கான விஷேட மார்க்க விளக்க வகுப்பு NTJ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடமையான குளிப்பின் சட்டதிட்டங்கள், நபிவழியில் வுளு, மற்றும் நபிவழியில் தொழுகை போன்ற அம்சங்கள் இதில் விரிவாக விளக்கப்படவுள்ளன அனைத்து பெண்களும் இதில் கலந்து கொள்ளுமாரு வேண்டுகிறோம்.
-
மிஹின்லங்கா மூடப்படுகிறது
கொழும்பு: இலங்கை அரசாங்கத்தின் சொந்த விமான நிறுவனமான மிஹின்லங்காவை மூடிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்களை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்கீழ் மிஹின் லங்காவின் பல அதிகாரிகள் ஏற்கனவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில சிரேஸ்ட அதிகாரிகள் பணிகளில் இருந்து விலகவேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
-
தெஹிவளை பள்ளிவாசல் நிர்மாணப்பணிக்குத் தடை
கொழும்பு: தெகிவளை பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையில் காவல்துறையின் தலையீடு காணப்பட்டதா என முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்காவுடன் இடம் பெற்ற சந்திப்பில் இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசீம், பைஸார் முஸ்தபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரகுமான், எஸ்.எம் மரிக்கார் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
-
“யூரோ-2016” இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பமாகிறது
பரிஸ்: உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூரோ 2016 போட்டிகள் இன்னும் சில மணிநேரங்களில் பிரான்ஸில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடந்த 1960ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
-
தண்ணீர் கேட்டுப் போன இஷாக்கிற்கு தண்ணி காட்டிய ரவுப் ஹக்கீம்
ஏ.எச்.எம். பூமுதீன் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் பாரிய பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் பிரச்சினை. இப்பிரச்சினை என்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. அம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் குடியேற்றத்தோடு ஆரம்பமான பிரச்சினை ஆகும். வடமத்திய மாகாண சபையின் முகா உறுப்பினராக மிக நீண்டகாலம் பதவி வகித்தவர் ராவுத்தர் நெயினா முகம்மட். இவர் நினைத்திருந்தால் அவரது வடமத்திய முதலமைச்சர் ஊடாகவோ அல்லது தனது தலைவர் ஹக்கீமின் அனுசரனையுடன் மத்திய அரசின் ஊடாகவோ இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.
-
காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் விவாத அழைப்பு
தகவல் NTJ மீடியா யுனிட்
-
கசகசா பற்றிய பொய்ப் பிரச்சாரம்
JM. ஜெஸீம் நோன்பு மாதம் வந்து விட்டாலே, முஸ்லிம்களாகிய நாம் குளிர்பானங்களோடு விரும்பிக் கலந்து குடிக்கும் “கசகசா” எனும் உணவுப் பதார்த்தத்தைப் பற்றிய அவதூறும் அவிழ்த்து விடப் படுவது வழக்கமாகி விட்டது. சென்ற வருடமும் இந்த அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது. இதைப் பல சமூக ஊடகங்களும் பரப்பவும் செய்தன. இது ஒரு தப்பான பிரச்சாரம். இதைப் பரப்புகிறவர்கள் இதை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.