Category: Your Kattankudy
-
மகாபோதி சங்கத்தில் முதலாவது இப்தார்; சமயப் பெரியார்கள் நல்லிணக்க உரை
இலங்கை வரலாற்றில் மகாபோதி சங்கத்தில் முதன் முறையாக நோன்பு துறக்கும் “இப்தார்” நிகழ்ச்சி செவ்வாயன்று மாலை நடைபெற்றது. பெளத்த – முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த “இப்தார்” நிகழ்வில் பெளத்த பிக்குமார் அநேகரும் முஸ்லிம்கள் உட்பட இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். தேசிய நல்லிணக்க புரிந்துணர்வு மன்றம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. மகாபோதி மண்டபத்தில் “மஃரிபு” தொழுகைக்கான “அதானை” மெளலவி எஸ். எஸ். எம். முஸ்தபா (பலாஹி) கூறினார்.
-
ஒலிம்பிக் 2012: பலத்த போட்டிகளுக்கிடையில் தொடர்ந்தும் சீனா முதலாமிடம்
Rank Country Total 1 China 36 22 19 77 2 United States 34 22 25 81 3 Great Britain & N. Ireland 22 13 13 48 4 South Korea 12 7 6 25 5 Russian Federation 11 19 22 52
-
ஹுனைஸ் எம்.பி. உரையாற்றியது தொடர்பில் சபையில் சூடான விவாதம்
அரைமணி நேரம் வாதப் பிரதிவாதங்கள்; ஆராய்ந்து கட்டளை பிறப்பிப்பதாக சபாநாயகர் அறிவிப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கடந்த ஜுலை மாதம் 19ம் திகதி பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை முடிந்த பின்னர் சபையில் உரையாற்றியது குறித்து சபையில் நேற்று கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. சுமார் அரை மணி நேரம் நீடித்த இவ்வாதம் பிரதிவாதங்கள் குறித்து ஆராய்ந்து பின்னர் கட்டளையொன்றைப் பிறப்பிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்தார். அதனைத்…
-
வாக்குச் சாவடி கியூ வரிசைகளில் மாற்றம்: ஆண், பெண்களுக்கு புதிய அணுகுமுறை
-தினகரன் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின் போது வாக்குச் சாவடிகளில் கியூ வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்த தேர்தல்கள் திணைக்களம் புதிய அணுகுமுறையொன்றினை கையாண்டிருப்பதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார். இதன்படி 1200 இற்கு மேற்பட்ட வாக்காளர்களைக்கொண்ட வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் என இரண்டு வரிசைகளுக்கு பதிலாக இம்முறை கலவனாக, தொடரிலக்கம் அடிப்படையில் இரண்டு வரிசைகளில் வாக்காளர்களை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 80 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்
-தினகரன் மூன்று மாகாண சபைகள்: 19,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு தேர்தல் நடைபெறவுள்ள ஏழு மாவட்டங்களிலும் தபால் மூல வாக்களிப்புக்கென ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 80 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் 19 ஆயிரத்து 292 பேர் தபால் மூலம் வாக்களிக்க நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம். மொஹமட் (நிர்வாகம்) தினகரனுக்குத் தெரிவித்தார்.
-
க.பொ.த. உ/பரீட்சை: ஆரம்பத்திலேயே வினாத்தாளில் தவறுகள்!
-MMS திங்கட்கிழமை ஆரம்பமான க. பொ. த. உயர்தரப் பரீட்சை நேற்றும் வழமை போலவே அனைத்துப் பரீட்சை நிலையங்களிலும் சுமுகமாக நடைபெற்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இணைந்த கணிதப் பரீட்சை வினாத்தாளில் ஒன்றரை புள்ளிக் கான ஒரு கேள்வி தவறாக வந்திருப்பதாக ஆசிரியர்களும் மாணவர்களும் புகார் செய்துள்ளனர்.
-
மட்டு மா.சபைத் தேர்தலில் இரு வாக்காளர்களுக்கு ஒரு வாக்களிப்பு நிலையம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது 2 வாக்காளர்களுக்கு ஒரு வாக்களிப்பு நிலையம் ஏற்படுத்தப்படவுள்ளது.
-
மன்னார் நீதவான் தொடர்பில் ஹுனைஸ் எம்.பி. சிறப்புரிமைப் பிரச்சினை
சபையில் பேசும் விடயங்களை எவரும் வெளியில் கேள்விக்குட்படுத்த முடியாது பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசும் விடயங்கள் குறித்து எவருக்கும் கேள்வி எழுப்பவோ அச்சுறுத்தவோ உரிமை கிடையாது. ஹுனைஸ் பாரூக் எம்.பி.யின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதோடு இந்தவிடயம் குறித்து சிறப்புரிமை குழுவினாலும் ஆராய முடியும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
‘தங்கமழை’யில் நனையும் பிரித்தாணியா!
Rank Country Total 1 China 34 21 18 73 2 United States 30 19 21 70 3 Great Britain & N. Ireland 22 13 13 48 -MJ தற்பொழுது விமர்சையாக இடம்பெற்றுவரும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தாணியர்களுக்கு தினமும் தங்கமழை பெய்து வருகின்றது. ஆம். வராலற்றில் ஓர் திருப்புமுணையாக இடம்பெறும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தாணிய வீரர்கள் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜனாதிபதி அடுத்த மாதம் மட்டக்களப்புக்கு விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்புக்கு வரும் ஜனாதிபதி மட்டக்களப்பு மாநகர வெபர் விளையாட்டரங்கில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
-
பல கோடி கண்களைக் குளமாக்கிய 10ம் நாள் ஒலிம்பிக்!
-MJ நேற்றி திங்கட்கிழமை ஒலிம்பிக் போட்டியின் 10வது நாள் நிகழ்ச்சிகள் வழமைபோல் இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருந்த லண்டன் ஒலிம்பிக் அரங்கு வீரர்களின் ஆனந்தத்தால் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
-
இஸட் புள்ளி விவகாரம்: தீர்வு எட்டப்படும் வரை பல்கலைக்கழக அனுமதியில்லை
மானியங்கள் ஆணைக்குழு உச்சநீதிமன்றத்துக்கு அறிவிப்பு இஸட் புள்ளிகள் (z-score) தொடர்பான விவகாரத்திற்கு முடிவு எட்டப்படும் வரையில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்திடம் உறுதியளித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் பணியானது பொதுவாக ஒவ்வொரு வருடத்திலும் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறுவதுடன், இந்த ஆண்டிலே அப்பணியை ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சார்பாக உச்ச நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார்.