Category: Your Kattankudy
-
பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் நித்திரையில் உயிரிழப்பு
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நேற்று சமுகமளிக்க வேண்டிய மாணவன் நித்திரையிலேயே உயிரிழந்த சம்பவமொன்று சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் சம்மாந்துறை முழுவதும் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சம்மாந்துறை சென்னெல் சாஹிராவில் கல்வி கற்ற முகம்மட் இஸ்மாயில் ஆசிக் (19) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
-
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது ‘கியூரியாஸிட்டி’
அமெரிக்காவின் ஆளில்லா வாகனம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. அந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்பதை ஆராயும் நோக்கிலேயே இந்த வாகனம் அங்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வெற்றியை அமெரிக்க தேசிய வின்வெளி அமைப்பான நாசா கொண்டாடி வருகிறது. ஒன்பது மாதப் பயணத்துக்கு பிறகு, ‘கியூரியஸிட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோட்டிக் வாகனம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது.
-
ரெலிகொம்: 1000 சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
ஒரு கோடி 28 இலட்சம் பேரிடம் செல்லிட பேசி 38 இலட்சம் பேரிடம் தொலைபேசிகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அண்மைக்காலமாக இலங்கை அடைந்துள்ள பெரு முன்னேற்றம் மிகவும் உயர்ந்த தன்மை கொண்டதாகும்.
-
திட்டமிடல் சேவையின் தரம் 111 பரீட்சை ஆக.7-8-9!
இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் 111ஐச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கான முதலாவது வினைத்திறன் காண் தடைப்பரீட்சை 2012 ஆகஸ்ட் 7ஆம் 8ஆம் 9ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும். இப்பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகளுக்கு குறித்த பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவனையும் அவர்களின் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எப்.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
-
அம்பாந்தோட்டைப் பிரதேசத்திலேயே சகல சாதனைகளும் நிகழ்த்தப்படுகின்றன!– சரத் பொன்சேகா
அம்பாந்தோட்டைப் பிரதேசத்திலேயே சகல சாதனைகளும் நிகழ்த்தப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதேச்சதிகாரம், சோசலிசம், மாக்சியம் இந்த எந்த வாதமும் எமக்குத் தேவையில்லை. நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய ஓர் ஆட்சி முறையே எமக்கு தேவைப்படுகின்றது. ஊழல் இல்லாத ஆட்சி ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமானது.
-
சீனா மீண்டும் முதலிடம்: புகழ்பெற்ற வீரர்களான அண்டி முரே, உசேன் போல்ட் ஆகியோரும் அபார வெற்றி!
-MJ ‘லண்டன் ஒலிம்பிக்’ நேற்று (ஞாயிறு) இருந்தது போல் என்றும் இருந்ததில்லை. ஒலிம்பிக் அரங்கில் 80,000 இரசிகர்கள் நிறைந்திருந்தனர். இதேபோல் பிரித்தாணிய வீரர் அண்டி முரே விளையாடிய டென்னிஸ் மைதானத்திலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் ஒன்றுகூடி இருந்தனர்.
-
க.பொ.த. உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்
க.பொ.த. (உ/த) பரீட்சை இன்று திங்கட்கிழமை (06) முதல் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார்.
-
நகரசபை உறுப்பினரின் தந்தை மீது தாக்குதல்: ‘கபே” அமைப்பிடம் புகார்
ஏறாவூர் நகரசபை உறுப்பினரான பூபாலரெட்ணம் சசிதரன் என்பவரின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சசிதரன் நீதியானதும் சுதந்திரமானதுமான உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிடம் ‘கபே” புகார் தெரிவித்துள்ளார். அவர் தனது புகாரில்,
-
தமிழ் பத்திரிகை ஒன்றின் விளம்பரத்தால் முகம் சுழிப்பு
தேசியப் பத்திரிகை எனக் கூறிக்கொள்ளும் தமிழ் தினசரி ஒன்றில் நேற்றைய தினம் அதன் முதற்பக்கத்தில் வெளியாகியிருந்த விளம்பரம் ஒன்று தமிழ் பேசும்மக்களது முகங்களைச் சுழிக்க வைத்ததுடன், பணம் சம்பாதிப்பதற்காக இப்படியுமா பிழைப்பு நடத்த வேண்டுமெனும் கேள்வியையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.
-
கபட நாடக ஆட்டமாம்; தாரை வார்க்கும் செயலாம்! ஆட்சியை தீர்மானிப்பது நாமே என்கிறார் ஹக்கீம்
மு.கா வின் எழுச்சியை பொறுக்க முடியாத சிலர் ஊடகங்களில் பிதற்றல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இந்த அரசை ஏமாற்றி கபட நாடகம் ஆடியே தனியாகப் போட்டியிட களமிறங் கியுள்ளதாக ஒருவர் ஊடகங்களுக்கு உளறுகின்றார். மஹிந்த ராஜபக்ஷவோடு ஒப்பந்தம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளை தாரை வார்ப்பதற்கே மு.கா தனித்துப் போட்டியிடுவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.
-
முதலாமிடத்தைத் தக்க வைத்துக்கொள்வதில் அமெரிக்கா-சீனா பலத்த போட்டி!
-MJ நேற்று சனிக்கிழமை (04-08-2012) நிறைவடைந்த ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படையில் ஒரே ஒரு தங்கப்பதக்க வித்தியாசத்தில் அமெரிக்கா முதலாமிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 26 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ள அமெரிக்கா, மொத்தமாக 54 பதக்கங்களை இதுவரையில் பெற்றிருக்கின்றது.
-
ஒலிம்பிக்ஸ்-குத்துச் சண்டை முடிவில் சர்ச்சை
லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய குத்துச் சண்டை வீரர் ஒருவர் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் அந்த முடிவை மாற்றியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் விகாஸ் க்ருஷன் அமெரிக்காவின் எரால் ஸ்பென்சை 13-11 என்கிற புள்ளிக் கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.