-தினகரன்
மூன்று மாகாண சபைகள்:
19,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
தேர்தல் நடைபெறவுள்ள ஏழு மாவட்டங்களிலும் தபால் மூல வாக்களிப்புக்கென ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 80 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் 19 ஆயிரத்து 292 பேர் தபால் மூலம் வாக்களிக்க நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம். மொஹமட் (நிர்வாகம்) தினகரனுக்குத் தெரிவித்தார்.
கடந்த வருடம் தேர்தல் டாப்பில் தரப்பட்ட தகவல்களுடன் இம்முறை வழங்கப்பட்டிருக்கும் தகவல்கள் ஒத்துவராமை, ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தமை, விண்ணப்பதாரி அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெறாமை, காலம் தாமதித்து விண்ணப்பித்தமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மேற்படி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற 6 ஆயிரத்து 811 விண்ணப்பங்களுள் ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அம்பாறையில் கிடைக்கப்பெற்ற 16 ஆயிரத்து 380 விண்ணப்பங்களுள் 3 ஆயிரத்து 468 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் 11 ஆயிரத்து 155 விண்ணப்பங்கள் கிடைத்த போதிலும், அதில் 543 விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டுள்ளன.
வடமத்திய மாகாணத்தில் தபால்மூல வாக்களிப்புக்கென அநுராதபுரம் மாவட்டத்திற்கு 39 ஆயிரத்து 366 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இதில் 4 ஆயிரத்து 144 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
14 ஆயிரத்து 25 விண்ணப்பங்கள் பொலன்னறுவைக்கு கிடைத்த போதிலும், அதில் 5 ஆயிரத்து 533 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தின் 14 ஆயிரத்து 69 பேர் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப் பித்திருந்தனர். இவர்களுள் 3063 பேர் நிராகரிக்கப்பட்டிருப்பதுடன், கேகாலை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்றுள்ள 18 ஆயிரத்து 274 விண்ணப்பங்களுள் 1328 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
Leave a comment