வாக்குச் சாவடி கியூ வரிசைகளில் மாற்றம்: ஆண், பெண்களுக்கு புதிய அணுகுமுறை

-தினகரன்

மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின் போது வாக்குச் சாவடிகளில் கியூ வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்த தேர்தல்கள் திணைக்களம் புதிய அணுகுமுறையொன்றினை கையாண்டிருப்பதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார்.

இதன்படி 1200 இற்கு மேற்பட்ட வாக்காளர்களைக்கொண்ட வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் என இரண்டு வரிசைகளுக்கு பதிலாக இம்முறை கலவனாக, தொடரிலக்கம் அடிப்படையில் இரண்டு வரிசைகளில் வாக்காளர்களை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வழமை போலவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருவேறு வரிசைகளை அமைப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பழமையான முறைப்படி ஒரு வாக்குச் சாவடிக்கு, வாக்காளர்களின் பெயர் அச்சிடப்பட்ட ஐந்து அல்லது ஆறு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். இம்முறை அனைத்தையும் நாம் இறு வட்டுக்குள் உள்ளடக்கியிருப்பதனால் அதிகளவில் புத்தகங்களை அச்சிடவில்லை. எனவே தான் தேர்தல்கள் ஆணையாளர் புதியதொரு அணுகுமுறையினை கையாளும் யோசனையினை முன்வைத்தார்.

இப்புதிய அணுகுமுறையின்படி 1200 இற்குற்பட்ட இலக்கங்களைக் கொண் டவர்கள் முதல் கியூ விரிசையிலும் அதற்கு பின்வரும் இலக்கங்களைக் கொண்டவர்கள் இரண்டாவது ‘கியூ’ வரிசையிலும் நிறுத்தப்படுவரெனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

Published by

Leave a comment