‘தங்கமழை’யில் நனையும் பிரித்தாணியா!

Rank Country Gold Silver Bronze Total
1 China 34 21 18 73
2 United States 30 19 21 70
3 Great Britain & N. Ireland 22 13 13 48

-MJ

தற்பொழுது விமர்சையாக இடம்பெற்றுவரும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தாணியர்களுக்கு தினமும் தங்கமழை பெய்து வருகின்றது. ஆம். வராலற்றில் ஓர் திருப்புமுணையாக இடம்பெறும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தாணிய வீரர்கள் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன் நிறைவடைந்த (திங்கள்) போட்டியின் அடிப்படையில் 18 தங்கங்களுடன் இருந்த பிரித்தாணியா இன்றைய நிறைவில் 22 தங்கங்களை வென்று 3வது இடத்தில் தொடர்ந்தும் இருந்த வருகின்றது.

இதற்கு முன்னர் 1908ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற 4வது ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தாணியா 56 தங்கங்களுடன் மொத்தமாக 146 பதக்கங்களைப் பெற்று முதலாவது இடத்தை முடிசூடிக் கொண்டது. அதன்பின்னர் இரண்டாவது முறையாக 1948ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற 11வது ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கம் மாத்திரமே பிரித்தாணியா வெற்றியீட்டியிருந்து, மொத்தமாக 23 பதக்கங்களுடன் 12வது இடத்தில் இருந்தது.

ஆனால் இம்முறை எதிர்பார்த்ததைவிடவும் பிரித்தாணிய வீரர்களின் வேகமும் திறமையும் மேலோங்கி இருக்கின்றது. சொந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களின் ஆதரவுகளுடன் பிரித்தாணிய வீரர்களும் இரசிகர்களும் தங்கமழையில் நனைந்து வருகின்றமை ஓர் விஷேட அம்சமாகும்.

நேற்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டிகளின்  முடிவின்படி தொடர்ந்தும் சீனா முன்னிலை வகிக்கின்றது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் பிரித்தாணியாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment