Category: Your Kattankudy
-
வியட்நாம் பயணமாகிறார் அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், வியட்நாம் நீதியமைச்சர் ஹா ஹூங் குங்க்கின் அழைப்பை ஏற்று, உத்தியோகபூர்வ விஜயமொன்றை வியட்நாம் நாட்டிற்கு மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (19) இரவு பயணமாகின்றார்.
-
மாபெரும் சைக்கிளோட்டப்பட்டி இன்று காத்தான்குடி பிரதான வீதி வழியாக…
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தமிழ், சிங்கள புது வருடத்தை முன்னிட்டு ஒலிம்பிக் யூத் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சைக்கிளோட்டப்பட்டி இன்று வெள்ளிக்கிழமை மட்டு கல்முனை பிரதான நெடுஞ்சாலை காத்தான்குடி பிரதான வீதி வழியாக மட்டக்களப்புக்கு செல்வதையும் பொலிஸார் பாதுகாப்புக்காக செல்வதையும் படங்களில் காணலாம்.
-
பொஸ்டன் குண்டு வெடிப்பு: மக்களை வீட்டுக்குள் இருக்குமாறு பொலிஸ் உத்தரவு: கொலையாளிகளில் ஒருவர் பலி! தேடுதல் வேட்டையில் பொலிஸார்!!
-MJ பொஸ்டன்: பொஸ்டன் நகர் குண்டு வெடிப்பில் கொலையாளிகள் என நிரூபிக்கப்பட்ட இருவரை இன்று காலை தொடக்கம் அமெரிக்க பொலிஸாரும், எப்.பி.ஐ யும் இணைந்து பொஸ்டன் நகரில் தேடுதல் வேட்டையை இன்று மேற்கொண்டிருந்தனர்.
-
தனியார் பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்!
கொழும்பு: தனியார் பஸ்களில் கட்டணங்களை செலுத்த பணத்திற்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்தும் திட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் செயற்படுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
-
இனந்தெரியாத ஆயுததாரிகளினால் முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசனின் வீடு தாக்கபட்டு சேதம்: ஆரையம்பதி இராசதுரை கிராமத்தில் சம்பவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இராசதுரை கிராமம்-03ல் அமையப் பெற்றுள்ள கோணமலை கண்ணதாசன் (வயது 36) என்பவரின் வீடு நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாதோரினால் ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டு அங்குள்ள உடைமைகளுக்கும் பொருட்களுக்கும் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது.
-
பொஸ்டன் குண்டு வெடிப்பு சூத்திரதாரிகள் இருவரின் படங்களை எப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.
-MJ அமெரிக்கா: பொஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியின் நிறைவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதுடன் 100க்கும் அதிகமானோர் காயப்பட்டிருந்தனர்.
-
நீதிபதிகளை சிறைபிடித்த வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கைது!
-OIT இஸ்லாமாபாத்: நீதிபதிகளை கூட்டாக சிறை வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று பிற்போட்டது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
பொது பல சேனாவின் முஸ்லிம்கள் மீதான ஜிஹாத் குற்றச்சாட்டுக்களும் எதிர்பார்ப்புக்களும்!
– AF47 கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை இலங்கையில் இருக்கும் 15 முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளையும் அலரி மாளிகைக்கு அழைத்து, இந்நாட்டில் முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் இன்றி, சம உரிமைகளுடன் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.
-
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒன்றுபட்டு உதவி புரிய முன்வர வேண்டும்: எஹியான்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா முசலி: முசலி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று பிரதேச சபை கட்டிடத்தில் பிரதேச சபை தலைவர் தேமசமான்ய எஹியான் தலைமையில் கூடியது.இக் கூட்டத்தின் போது சபை தலைவர் எஹியான் விசேட பிரேரனையொன்றை சமர்பித்து அதனை சபை உறுப்பினர்களின் ஏக அங்கீகாரத்தை பெற்றார். இந்த பிரேரணையினை சபையில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எக மனதாக ஏற்றுக் காண்டனர்.
-
வீதிக்கு வந்த கிண்ணியா T.B.ஜாயா வித்தியாலயத்தின் மாணவர்கள்
– பஹ்மியூஸூப் கிண்ணியா: இடவசதியற்ற நிலையில் வேறு கட்டடமொன்றில் இயங்கிவரும் கிண்ணியா T.B. ஜாயா வித்யாலயத்தின் மாணவிகளும் அவர்களது பெற்றோரும் 18.04.2013 புதன்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
-
மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது!
-அமைச்சர் கெஹெலிய கருத்து- கொழும்பு: அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டம் சகல கிராமங்களிலும் அமுல்படுத்தப்படுவதாலும் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாத காரணத்தினாலும் மின் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாதுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
-
அணுகுண்டு வெடிப்பின் தாக்கத்தை ஒருமித்த அமெரிகாவின் தீ விபத்து! 15 பேர் பலி!!
-MJ- டெக்ஸாஸ்: அமெரிக்காவில் மிக மோசமான தீ விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வேக்கோ என்ற ஊர் அருகே உரத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து நடந்த பெரிய வெடிச் சம்பவத்தில் 15 பேர் வரையிலானவர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருக்கின்றனர்.