அணுகுண்டு வெடிப்பின் தாக்கத்தை ஒருமித்த அமெரிகாவின் தீ விபத்து! 15 பேர் பலி!!

_67075320_67075319[1] -MJ- டெக்ஸாஸ்: அமெரிக்காவில் மிக மோசமான தீ விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வேக்கோ என்ற ஊர் அருகே உரத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து நடந்த பெரிய வெடிச் சம்பவத்தில்  15 பேர் வரையிலானவர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருக்கின்றனர்.

அணுகுண்டு வெடித்தால் எழக்கூடிய விதமாக வெடிச் சம்பவத்தை அடுத்து  புகை மூண்டது என இந்த தொழிற்சாலை அமைந்துள்ள வெஸ்ட் என்ற சிற்றூரின் மேயர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு குற்றச்செயல் எதுவும் காரணமாக இருந்திருப்பதற்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை என பொலிசார் கூறுகின்றனர்.

130418064903_fertilizer_plant__624x351_reuters[1]

இந்நிலையில் தொழிற்சாலைக்கு அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேடிப் பார்த்துவருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் பெருமளவிலே அழிக்கப்பட்டுள்ளதாகவும், அருகிலிருந்த சுமார் எழுபத்தைந்து வீடுகளும், சுகாதார மையம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் அவசர உதவி சேவைப் பிரிவின் அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுமக்கள் அவசரமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

_67075320_67075319[1]

மீட்புப் படையினர் தொடர்ந்தும் பலியானவர்களின் உடலங்களையும், சேதமான கட்டடங்களின் எச்சங்களையும் அகற்றி வருகின்றனர். காயப்பட்டவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரையிலும் 15 பேர் பலியாகி இருக்கின்றனர். பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

_67088158_texas_factory_explosion_gallery_976[1]

Published by

Leave a comment