வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒன்றுபட்டு உதவி புரிய முன்வர வேண்டும்: எஹியான்

–  இர்ஷாத் றஹ்மத்துல்லா

yahyanமுசலி: முசலி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று பிரதேச சபை கட்டிடத்தில் பிரதேச சபை தலைவர் தேமசமான்ய எஹியான் தலைமையில் கூடியது.இக் கூட்டத்தின் போது சபை தலைவர் எஹியான் விசேட பிரேரனையொன்றை சமர்பித்து அதனை சபை உறுப்பினர்களின் ஏக அங்கீகாரத்தை பெற்றார். இந்த பிரேரணையினை சபையில் இருந்த  தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எக மனதாக ஏற்றுக் காண்டனர்.

இங்கு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் ஜனாதிபதிஇபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, முசலி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த சபை அமர்வின் போது முன் வைக்கப்பட்ட பிரேரணை குறித்து ஊடகங்களுக்கு சபை தலைவர் கருத்துரைக்கும் போது –

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அநியாயத்தை தோற்கடிக்க அமைச்சர் றிசாத் பதியுதீனால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு இந்த நாட்டில் உள்ள ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகள்இமற்றும் துறை சார்நதவர்கள்இபுத்தி ஜீவீகள் அனைவரும் ஒன்று பட்டு உதவி புரிய முன்வர வேண்டும் என்று மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபையின்  தலைவர் தேசமான்ய எஹியான் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக மிகவும் கடுமையான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், களமிறங்கி அதனை தடுக்கும் அனைத்து வேலைகளையும் செய்துவருவது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்திவருகின்றது.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இந்த இனச் சுத்திகரிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவருகின்றது.அன்று முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு பக்கபலமாக விடுதலைப் புலிகளுடன் இருந்தவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் அணி என்பது பகிரங்கமான உண்மையாகும்.அதனை அவர்களால் ஒரு போதும் தட்டிக்கழிக்க முடியாது.

மறியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்கள், முஸ்லிம்கள் குறித்து ஆக்க பூர்வமான, அனுதாபமான கருத்துக்களையும், உரைகளையும் ஆற்றியும் வெளியிட்டும் வருவது, பாராட்டுக்குரியதொன்றாக இருந்த போதும், அதே அணியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களை அவமதிக்கும் செயற்பாடுகளையும்இமக்களது உரிமைகளை பெற்றுக் கொள்ளவிடாது தடையேற்படுத்தும் செயற்பாடுகளிலும்ஈடுபட்டுவருகின்றமை ஒன்றுக்கொன்று மரண்பாடானதாகவே காணப்படுகின்றது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் செயற்படுகின்ற போதும்இபள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்ற போதும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், புத்தி ஜிவிகளும் கடும் பிரயத்தனத்துடன் ஒன்று பட்டு அதற்கெதிராக கிளரந்தெழுந்து செயற்படுவது வரவேற்கக் கூடிய தொன்றாகும்.அதே போல் 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போதுஇஅங்கிருந்த நுற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் துவம்சம் செய்யப்பட்டனஇஅவைகள் பாதணிகள் அணிந்தவர்களினால் அசிங்கப்படுத்தப்பட்டன.

இவைகள் முஸ்லிம் சமூகத்தினால் நோக்கப்பட வேண்டியதுள்ளது. இன்றைய சூழலில் அவற்றினை உயிரோட்டமுள்ளதாக மாற்ற மீண்டும் முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களில் மீள்குடியேற வேண்டும்.அதனை எமது அரசியல் தலைமை செய்கின்ற போதுஇஅதளை இனவாத சித்தரித்து காட்டும் துரோகத் தனமான செயல்கள் இடம் பெறுகின்றன.இவற்றுக்கு சில தமிழ் உடகங்கள் களம் அமைத்துக் கொடுத்துள்ளது. இது வேதனை தரும் நிகழ்வாகும்.

முஸ்லிம்கள் தமது அரசியல் பிரதி நிதிகளை பெற்றுக் கொள்ள 1989 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து பாராளுமன்ற பிரதி நிதிகளை தெரிவு செய்தனர் .ஆனால் அந்த கட்சி முழுமையாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு போதுமான பங்களிப்பினை செய்யவில்லை.முன்னால் அமைச்சர் மர்ஹூம் நுர்தீன் மசூர் அவர்கள் இருந்திருந்தால் இந்த மீள்குடியேற்றத்திற்கு தம்மை முழுமையாக அரப்பணித்து செயற்பட்டிருப்பார்.

அன்று தமிழ் மக்கள் 3 இலட்சம் பேரை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்இவன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருந்து தமிழ் கிராமங்களுக்கு பலகோடி ரூபாய்கள் செலவில் பாரிய அபிவிருத்திகளை செய்துவருகின்றார். இதை எமது முஸ்லிம்கள் தடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள முசலி பிரதேச சபையின் தலைவர் தேசமான்ய எஹியான் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் முன்னின்று செயலாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்துள்ளார்.

yahyan

Published by

Leave a comment