பொஸ்டன்: பொஸ்டன் நகர் குண்டு வெடிப்பில் கொலையாளிகள் என நிரூபிக்கப்பட்ட இருவரை இன்று காலை தொடக்கம் அமெரிக்க பொலிஸாரும், எப்.பி.ஐ யும் இணைந்து பொஸ்டன் நகரில் தேடுதல் வேட்டையை இன்று மேற்கொண்டிருந்தனர்.
கொலையாளிகளான இருவரும் சகோதரர்கள்கள் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவர்களில் சொகார் சர்னோவ் (Dzhokhar Tsarnaev) எனும் 19 வயதுடைய இளைஞரை இன்று காலை பொஸ்டன் பொலிசார் சுட்டுக் கொண்டனர்.
மற்றைய கொலையாளியை தேடி தீவிர தேடுதல் வேட்டை தற்பொழு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. எவ்வேளையிலும் மற்றைய கொலையாளி தப்பிச் செல்ல முற்படுகையில் சுட்டுக்கொல்லப்படலாம் எனக்கருதி, பொதுமக்களை தங்களது வீடுகளுக்குள் இருக்குமாறு கடுமையான உத்தரவை பொஸ்டன் பொலிஸாரும், பொஸ்டன் மேயரும் அறிவித்திருக்கின்றனர்.
கொலையாளி என உறுதிப்படுத்தப்பட்ட இவ்விருவரும் செக் குடியரைச் சேர்ந்தவர்கள் எனவும், 10 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு வந்திருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
![_67109077_67111682[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/67109077_671116821.jpg?w=150&h=80)
![_67103675_suspects_duo_464[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/67103675_suspects_duo_4641.jpg?w=304&h=171)
![_67109077_67111682[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/67109077_671116821.jpg?w=630&h=336)
Leave a comment