பாக்கிர் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டும் மக்களின் தற்போதயை நிலைப்பாடுகளும்…

Kattankudy North Entrance  www.yourkattankudy.com

AK-77

காத்தான்குடி: தற்பொழுது காத்தான்குடியை அதிரவைத்துக்கொண்டிருக்கும் மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட, காத்தான்குடி நகரசபை உறுப்பினரான பாக்கீர், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அபாண்டமான குற்றச்சாட்டை களைந்தெரிய நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தது போல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மெத்தைப்பளள்ளிவாயலில் சத்தியம் செய்வதற்கு தயாராக இருப்பதாக எமது செய்தியாளருக்கு சற்று முன்னர் தெரிவித்திருந்தததை நாம் பிரசுரித்திருந்தோம்.

‘தான் குற்றமற்றவன் என சத்தியம் செய்யத் தயார்’ என  பொதுமக்களுக்கு அறிவித்து பல மணிநேரங்கள் சென்றுவிட்ட நிலையிலும் குற்றம் சுமத்தப்பட்ட பாக்கீர் அவர்கள், இதுவரையிலும் வீடு திரும்பாமல் தலைமறைவாகி இருப்பது மக்களிடத்தில் மென்மேலும் சந்தேகங்களைத் தோற்றுவித்து வருகின்றன.

பிரதான வீதிகளிலும், பள்ளிவாயல்களிலும், அதிருப்தியுடன் இவ்விடயங்களை மக்கள் பேசி வருவதையும், இன்னும் சந்தேகங்களுடனேயே இச்செயலை பொதுமக்கள் அவதானித்து வருவதையும் கண்கூடாகப் பார்க்க முடிவதுடன், ‘கடமையுடன் செயற்பட வேண்டிய பொலிஸாரும் கைவிட்ட நிலையில், பொறுப்பு வாய்ந்த ஊர்த்தலைமையும் கைகழுவிய நிலையில், சில அரசியல் பிரதிநிதிகளால் மாத்திரம் இவ்விடயம் பொதுமக்கள் மத்தியில் கொண்டு வரவிருப்பதை எண்ணி தாங்கள் வெட்கப்படுவதாகவும் ‘ மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பாக்கீரின் அபகீர்த்தியை களைந்தெறிய இரவு பகலாக ஓடித்திரியும் உள்ளுர் ஆளும் அரச தரப்பினர்களும், ஊர்ப் பிரமுகர்களும் குறித்த மாணவி விடயத்தில் மூக்கை நுழைக்க முடியாமல் திண்டாடி வருவதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவியை, ஊருக்கு அழைத்து வந்து, நடந்த சம்பவத்தை உண்மைப்படுத்துவதற்கு பொதுமக்கள் முன்வந்திருப்பதும், அன்று நடந்த சம்பவத்தின் உண்மை நிலையினை அவரது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் அவதானிக்க முடிகிறது. எனினும் பாக்கீரின் சத்தியத்தைத் தொடர்ந்து பல இரகசியங்கள் வெளிவரலாம் எனவும் தெரியவருகிறது.

இதற்கிடையில் பாக்கீர் ஓட்டமாவடிக்கு தப்பிச் சென்றிருந்ததாக ஊர்ஜிதமற்ற தகவல்களும் தெரிவித்திருந்தாலும், தான் காத்தான்குடியில் இருப்பதாக தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு தொடர்ந்தும் தெரியப்படுத்தி வருவதும் பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றன.

இருந்தபோதிலும், ‘குறித்த மாணவியை சத்தியம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை பெண்கள் தரப்புக்கள் முன்னின்று ஏற்பாடு செய்ய வேண்டும்’ எனவும், குறித்த பெண்ணுக்கு  நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசியல் வேறுபாடின்றி அல்லாஹ்வுக்காக அனைவரும் ஒன்றுபட  முன்வர வேண்டும்’  எனவும் இளைஞர் அமைப்புக்கள் குரல் கொடுத்து வருகின்றன.

‘நீதி அழிந்துவிட்டது! இறைவன் அறிந்த விடயத்தில் இறைவனே தீர்ப்பு வழங்கட்டும்’ என சிலர் விலகிப்போவதையும் காணமுடிகிறது!!

Published by

Leave a comment