கொழும்பு: இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, பரீட்சையில் தோற்றாத ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான இந்த பரீட்சையில் 37000க்கும் அதிகமானோர் பரீட்சை எழுதியதாகவும், அதில் 410 பேர் தேறியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, பரீட்சையில் தோற்றாத அரசியல் செல்வாக்குப் பெற்ற 600க்கும் அதிகமானோருக்கு நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் தமது மனுவில் கூறியுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் 15 ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
-BBC
Leave a comment