கிண்ணியா மட்டக்களப்பு வீதியிலுள்ள சட்டவிரோத கடைகள் நகரசபையால் சுற்றிவளைப்பு!

kinniya (2)– ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மியின் முன்னெடுப்பில் கிண்ணியா நகரசபைக்குட்பட்ட எல்லைப் பிரதேசம் அழகுபடுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக கிண்ணியா புஹாரியடி சந்தி அழகுபடுத்தும் வேலைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட முன்னெடுப்பாக கிண்ணியா-மட்டக்களப்பு பிரதான வீதியோர புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பிட்ட பிரதேசத்தினூடாக தற்போது  அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதும் சுற்றுலா பிரயாணிகளை அதிகம் கவரக்கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதனால் கிண்ணியா மட்டக்களப்பு பிரதான வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கொட்டில்கள், கடைகளை ஒரே இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட கடைகள், தற்காலிக கொட்டில்கள் சம்பந்தமான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது கிண்ணியா பிரதேசத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நடைபெறுவதாகவும் நகரபிதா தெரிவித்ததோடு சட்டவிரோத கட்டடங்கள், கொட்டில்களை நகரசபை அனுமதியுடன் அமைப்பதற்கான உத்தரவினையும் பிரப்பித்துள்ளதாகவும் நகரபிதா ஹில்மி தெரிவிதுள்ளார்.

kinniya (2)

இதன் பொருட்டு நகரபிதாவின் பணிப்புரைக்கமைவாக நேற்று நகரசபை உத்தியோகத்தர்கள், வருமான மேற்பார்வையாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் சகிதம் கிண்ணியா-மட்டக்களப்பு வீதியோரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத கட்டடங்கள், கொட்டில்கள், தற்காலிக கடைகள் சுற்றிவளைக்கப்பட்டதோடு, வியாபார உரிமக் கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டுக்களும் பரிசீலிக்கப்பட்டு நகரசபை அனுமதியுடன்  மேற்கொள்ள உத்தரவும் பிரப்பிக்கப்பட்டது.

kinniya (3)

உரிமக்கட்டணம் செலுத்தாதவர்களுக்கும், அனுமதி பெறாதவர்களுக்கும்  ஒரு வாரகால அவகாசமும் வழங்கப்பட்டது. அனுமதி பெறத்தவறும் பட்சத்தில் கடைகள், கொட்டில்கள் அனைத்தும் கிண்ணியா நகரசபையினால் அகற்றப்படவுள்ளதாகவும் சுற்றிவளைப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிண்ணியா நகரத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழான முன்னெடுப்புக்கள் எந்தத் தடைவந்தபோதும் அதையும் மீறி தொடருமென கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி தெரிவித்தார்.

kinniya (4)

kinniya

Published by

Leave a comment