சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

sammஅன்படையீா்.. அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்மது……)

காத்தான்குடி: அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சா/த மற்றும் உ/தர பரீட்சையில்  சிறந்த பெறுபேற்றை பெற்று எமதூருக்கும் சமூகத்திற்கும் பெருமை  தேடித்தந்த மாணவ மாணவிகளை  கௌரவிக்கும் நிகழ்வுக்காக எமது காத்தான்குடி சம்மேளன நிருவாகப் பிரிவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளிடம் இருந்து கீழ்வரும் தகவல்கள் கோரப்படுகின்றன.

01. உயர்தரத்தில் விஞ்ஞான கணித பிரிவில் மாவட்ட நிலை 20ற்கு உட்பட்வர்களும்

02. வர்த்தக கலை பிரிவில் மாவட்ட நிலை 10ற்கு உட்பட்வர்களும்

03. சாதாரன தர பரீட்சையில் 9 பாடங்களிலும் 9 A தர சித்தி பெற்றவர்களும்

தமது விபரங்களை நாளை 25.04.2013 மாலை 5.30மணிக்கு முன்பதாக சம்மேளன காரியாலயத்திலோ அல்லது 0773778582 எனும் தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

செயலாளர்,

கல்வி அபிவிருத்தி சபை,

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ,

காத்தான்குடி.

Published by

Leave a comment