இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதுவர் டொக்டர் ஜேர்கன் மொர்ஹாட், அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா

rishad (2)கொழும்பு: இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக மேம்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையானது ஆசிய கண்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும் என்று இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதுவர் டொக்டர் ஜேர்கன் மொர்ஹாட் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் தெரிவித்தார்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கைக்கும் ஜேர்மனுக்குமிடையில் காணப்படும் நீண்டகால உறவு மிகவும் மதிக்கப்பட்டுவருவதாகவும், இலங்கையின் தொழிநுட்பதுறைகளுக்கு ஜேர்மன் நாடு உதவிகளை செய்து வவருவதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

rishad (2)

வடக்கில் யுத்தத்தால் அழிந்து போன தொழிற்பேட்டைகளை மீள உருவாக்கல், மற்றும் புதிய தொழில் உற்பத்திகளுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்கள் எளன்பன குறித்து ஜேர்மன் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதின் அவசியம் குறித்து அமைச்சர் றிசாத் பதீயுதீன் இங்கு சுட்டிக்காட்டினார்.

அதே வேளை இலங்கையில் அமைக்கப் பெற்றுள்ள ஜேர்மன் தொழில் நுட்ப பயிற்சி பிரிவில் பயிற்சி பெற்று வெளியான இலங்கை நாட்டவர்கள் பலர் நல்ல தொழில் வயாப்புக்களை பெற்றுள்ளதாகவும்,இவ்வாறு பயிற்சி பெற்றவர்களை அண்மையில் அவுஸ்திரேலியாவில் சந்திக்க முடிந்ததாகவுமட அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

rishad

Published by

Leave a comment