காலியில் இயங்கும் ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்வி நிலையத்தியில் மூன்று மாதகால பயிற்சிநெறியை முடித்துக் கொண்ட தென் மாகாண உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

galle (2)காலி: காலி  இப்னு அப்பாஸ் அறபுக்கல்லூரியில் அமைந்துள்ள ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்விநிலையத்தியில் தமது மூன்று மாதகால பயிற்சிநெறியை முடித்துக் கொண்ட தென் மாகாண உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் இப்னு அப்பாஸ் அறபுக்கல்லூரி பள்ளிவாயல் மண்டபத்தில் அண்மையில் ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்வி நிலையத்த்தின் பணிப்பாளரும் இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் தலைவருமான மௌலவி எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்றது.

மூன்றுமாத கால இடைவெளியில் பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற்ற மேற்படிபயிற்சி நெறியில் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு, கொள்கை சார்ந்தபிரிவுகள், தப்ஸீர், குர்ஆனிய சட்டக்கலை, இஸ்லாமியப்பிரச்சாரக் கலை, தகவல் தொழில்நுட்பம், மூலநூல்களை மனனமிடல் ஆகிய பல விடயங்களை உள்ளடக்கிய பாடநெறிதுறை சார்ந்த வளவாளர்களால் நடாத்தி முடிக்கப்பட்டது,

இதன் போது பயிற்சிநெறியில் கலந்துகொண்ட சகல உலமாக்களுக்கும் சான்றிதழ்களும் கொடுப்பணவும் வழங்கப்பட்டதுடன் இறுதிப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டவர்களுக்குமுறையே மடிக்கணினி, கைக்கணினி, நவீன ஸம்ஸுங்கெலக்ஸி கையடக்கத்தொலைபேசி என்பனபரிசாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை முன்னிட்டு சுமார் 8400க்கும் அதிகமானமுக்கிய அரபு நூல்கள் அடங்கிய கணினி இறுவட்டுத் தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது .

இப்பட்டப்பின் படிப்பு நிலையத்தின் அடிப்படைநோக்கம் தஃவாத் துறைக்கும் அரபுக்கல்லூரிகளின் கற்பித்தல் பணிக்கும் முழுத்தகுதிமிக்க உலமாக்களாக எமது அரபுக்கல்லூரிகளின் பட்டதாரிகளை மேம்படுத்துவதாகும் இவ்விலக்கை அடைவதற்காக சீரிய ஒழுக்கச் சூழலில் சிறந்த கல்வியைவழங்கும்விதத்தில் கற்கை நெறியொன்று நடாத்தப்படவுள்ளது,

 இவ்விசேடஉயர்கற்கைநெறி பாரம்பரிய ஷரீஆக் கலைகளையும் நவீனகல்விசார் துறைகளையும் உள்ளடக்கி ஒருவருட கால எல்லையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உணவு தங்குமிட வசதிகள் இலவசமாக வழங்கப்படுவதுடன் மாதாந்தம் ஊக்குவிப்புக் கொடுப்பனவும் வழங்கப்படும், இதனைப் பூர்த்திசெய்து அதிதிறமையான பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கும் அவர்களதுகல்லூரிகளுக்கும் பெறுமதிமிக்கபரிசில்கள் கொடுக்கப்படுவதுடன், அவர்கள் வெளிநாட்டுஅரபுப் பல்கலைக் கழகங்களில் கல்வியைத் தொடர்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.

இன்ஷா அல்லாஹ்; கூடியவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள மேற்படிகற்கைநெறியில் இணைய விரும்புவோர் கீழ்வரும் தகமைகளை கொண்டிருத்தல் வேண்டும்.

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரபுக்கலாசாலை ஒன்றில் பட்டம் பெற்றிருத்தல்,

இறுதிப்பரீட்சையில் மிக நன்று தரத்தில் சித்தியடைந்திருத்தல்

25 வயதிற்கு உட்பட்டிருத்தல்,

அடிப்படை ஆங்கில மொழியறிவும் அரபு மொழியை சிறப்பாகக் கையாளும் திறமையுமுள்ளவராயிருத்தல் வேண்டும், எனவும் இது தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு மௌலவி  டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) 0777921418 / 0773418432  
 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்வி நிலையத்த்தின் பணிப்பாளர் மௌலவி எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான (பஹ்ஜி) தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment