அஸாத் சாலி மீண்டும் ஐ.தே.க இல் இணைவு!

asad_sali_[1]AK-77

கொழும்பு: அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாத் சாலி, மீண்டும் ஐ.தே.க. இல் இணைவதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரியவருகிறது.

அஸாத் சாலியின் விடுதலைக்கு பல மர்மங்கள் இருந்த போதிலும், தற்பொழுது அரசியலின் பக்கம் மீண்டும் நகர்வதற்கு உத்தேசித்திருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை செய்யப்பட்ட அஸாத் சாலி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஐ.தே.க. இன் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட அக்கட்சியின் பல பிரமுகர்கள் சென்று நலம் விசாரித்திருந்தனர்.

தற்பொழுது அஸாத் சாலி ஐ.தே.க. இல் மீண்டும் இணைந்து, தனது அரசியல் பயணத்தைத் தொடரவிருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment