கொழும்பு: கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் வருமானம் 510மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
வருடாந்தம் 104மில்லியன் ரூபாயை வருமானமாக பெற வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கடந்த 4 மாங்களில் குறித்த இலக்கை விட மேலும் பல மடங்கு வருமானம் பெற்றிருப்பது திணைக்களத்துக்கு பெரும் வெற்றியாகும் என்று சுங்க திணைக்கள வருமான மேற்பார்வைப் பிரிவு பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்..
இலங்கை இலங்கை சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜேவீரவின் பணிப்புரை மற்றும் வழி காட்டலின் கீழ் இந்த வெற்றியை அடைய முடிந்ததாக பணிப்பாளர் மாலி பியசேன மேலும் தெரிவித்தார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment