கம்பாலா: உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மூலம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
உகண்டாவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்த உதவுமாறு உகண்டா கிரிக்கெட் விளையாட்டுக் கழகம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி இந்த உறுதி மொழியை வழங்கினார்.
அக்குழுவினரின் விளையாடடுத் திறமைகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார். கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார்.
![uganta-cricket-1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/uganta-cricket-11.jpg?w=500&h=281)
![uganta-cricket-2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/uganta-cricket-21.jpg?w=500&h=322)
Leave a comment