லண்டன்: சற்று முன்னர் இடம்பெற்று வந்த ஐ.சி.சி. கிண்ண சம்பியன்ஸ் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும் தென்னாபிரிக்காவும் விளையாடி இருந்தன. போட்டி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பிருந்து மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது. இதனால் 31ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 31 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 230 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 26.1 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 190 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு முன்னர் வீசப்பட்ட 25வது ஓவரில் பொல்லார்ட் ஆட்டமிழந்தார். மேற்கிந்தி அணி 6வது விக்கட்டை இழக்காமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். அல்லது 191 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும் டி.எல் முறையில் வெற்றி பெற்றிருக்கும்.
இவ்விரு அணிகளும் 26.1 ஓவரில் சமமான ஓட்டங்களைப் பெற்றும், சமமான விக்கட்டுக்களை இழந்தும் காணப்படுவதால், போட்டி சமநிலையில் தற்பொழுது நிறைவுக்கு வந்திருக்கின்றது.
சிரேஷ்ட கிரிக்கட் சுற்றுப்போட்டிகளில் இயற்கை பாதிப்புக்களால் அதிகம் வெளியேறிய அணி தென்னாபிரிக்கா இருந்த போதிலும், இம்முறை பரிதாபகரமாக மேற்கிந்திய அணிகள் இச்சுற்றுப் போட்டியிலிருந்து வெளியேறுகின்றனர்.
தென்னாபிரிக்கா அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருக்கின்றது. ஏற்கனவே இந்தியாவும் அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இருக்கின்றது. மிகவும் பலம் பொருந்திய சிறந்த அணியாகக் கருதப்பட்ட மேற்கிந்திய அணி, அதிர்ச்சித் தோல்வியில் வெளியேறி இருக்கின்றது.
2004ம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்தை மேற்கிந்திய அணிகள் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![rain_2959354[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/rain_29593541.jpg?w=150&h=112)
![47370[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/473701.jpg?w=593&h=395)
![rain_2959354[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/rain_29593541.jpg?w=593&h=444)
Leave a comment