அஸ்ரபின் கொலையை ஹக்கீம் மீது திசைதிருப்பம்?

hakeemகொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர் எம்.எச்.எம் அஷ்ரப்பின் கொலைக்கும், தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றக்கொண்டமைக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

புலிகளுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் தேவையான வகையில் அஷ்ரப்பை வழிநடத்த முடியவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு தேவையான ஓர் முஸ்லிம் தலைவரை உருவாக்க அஷ்ரப் கொல்லப்பட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

13ம் திருத்தச் சட்டம், மாகாணசபை முறைமை, இந்திய இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லிம்களை அணி திரட்டும் நோக்கிலேயே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

எனினும், முஸ்லிம் காங்கிரஸ் புலிகளுக்காகவும் புலம்பெயர் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment